இந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சுற்றி வந்தாலும், எத்தனை முறைப் பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஆற்றல் அதற்கு உள்ளது.
யானைகளைப் பற்றி நினைத்தால், அதன் பல சிறப்பம்சங்கள் நம் நினைவலைகளில் வந்து செல்லும். ஆனால் யானைக் குட்டிகளைப் பற்றி நினைத்தால்… அவைகள் அதீத குறும்பு செய்யும் உயிரினம். அந்தக் குறும்புத்தனத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ. இந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சுற்றி வந்தாலும், எத்தனை முறைப் பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஆற்றல் அதற்கு உள்ளது. அப்படியொரு சம்பவத்தைச் செய்துள்ளது ஒரு குறும்புக்கார குட்டி யானை.
இந்திய வனத் துறை அதிகாரி, சுசாந்தா நந்தாவால் மீண்டும் பகிரப்பட்டு வைரலாகியுள்ள உள்ள இந்த வீடியோவில், இரண்டு குட்டி யானைகள் குட்டைக்குப் பக்கத்தில் நிற்பது தெரிகிறது. திடீரென்று ஒரு யானை, இன்னொரு யானையை பின்னாலிருந்து முட்டி குட்டைக்குள் தள்ளி விடுகிறது. இதை சற்றும் எதிர்பார்த்திராத இன்னொரு யானை, ‘தொபக்' என நீருக்குள் விழுந்து முங்குகிறது. சில நொடிகளே ஓடும் இந்த வீடியோவில், யானைக் குட்டி நீருக்குள் விழும் நேரத்தில் யாராலும் சிரிப்பை அடக்க முடியாது.
வீடியோவைப் பார்க்க:
பல்லாயிரம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்குப் பலரும் சிரிப்பு இமோஜிக்களைப் பறக்கவிட்டுள்ளனர்.
இதைப் போன்று ‘யானைகளின் குறும்புத்தனங்களை' பறைசாற்றும் பல வீடியோக்கள் இருக்கின்றன. அதில் இன்னொன்றையும் பார்க்க:
நேச்சுரல் வேர்ல்டு நியூஸ் அளிக்கும் தகவல்படி, யானைக் குட்டிகளுக்கு விளையாட்டுத் தனமான ஒரு பக்கம் உள்ளதாகவும், வாழ்க்கை மற்றும் சமூக திறனை வளர்த்துக் கொள்ள இதைப் போன்ற குறும்புத்தனங்கள் அவைகளுக்கு அவசியம் என்றும் கூறுகிறது.
Click for more
trending news