हिंदी में पढ़ें Read in English
This Article is From Mar 06, 2020

குட்டி கொரில்லாவின் குறும்புத்தனம்… அதன் தாய் செய்த கியூட் செயல்; இந்த வீடியோ வைரல் ரகம்!

Viral Video: ஒருவர், “கடைசி முறை குதிக்கும் முன்னர் கொரில்லா குட்டி, மார்பில் அடித்துக் கொள்வது அவ்ளோ அழகு,” என்கிறார்

Advertisement
விசித்திரம் Edited by

Viral Video: இன்னொருவரோ, “இந்த குட்டி விளையாடுவதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். சோ கியூட்” என்றுள்ளார். 

குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்பார்கள். அது உண்மைதான் போல என நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு குட்டி கொரில்லா, வைக்கோல் மீது குதித்துக் குதித்து விளையாடுகிறது. திடீரென்று அங்கு வரும் அதன் தாய், ‘போதும் வா போலாம்' என்பது போலக் குட்டியை அழைத்துச் செல்கிறது. சொல்லும்போது சாதாரணமாகத் தெரிந்தாலும் வீடியோவைப் பார்க்கும் போது, மனிதர்களின் குழந்தைப் பருவத்தை நினைவூட்டுவது போலவே உள்ளது இந்த வீடியோ. 

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு என்பவரால் இந்த வீடியோ, ட்விட்டரில் பகிரப்பட்டது. வீடியோவுடன் அவர், “நம்முள் இருக்கும் குழந்தைக்காக. 3வது முறை கொரில்லா குட்டி குதிப்பதையும் அதன் பின்னர் நடப்பதையும் உற்றுப் பாருங்கள்,” என்று வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார். 

வீடியோவை கீழே பாருங்கள். 3வது முறை கொரில்லா குட்டி குதிப்பதற்கு முன்னால் செய்யும் விஷயத்தை மிஸ் செய்து விடாதீர்கள்:

ஆன்லைனில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டதிலிருந்து 82,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 6,000 பேர் வீடியோவுக்கு லைக்ஸ் போட்டுள்ளனர். பலரும் தங்கள் வாழ்க்கையோடு இந்த வீடியோவை ஒப்பிட்டுப் பார்க்க முடிவதாகக் கூறியுள்ளனர். 

ஒருவர், “கடைசி முறை குதிக்கும் முன்னர் கொரில்லா குட்டி, மார்பில் அடித்துக் கொள்வது அவ்ளோ அழகு,” என்கிறார். இன்னொருவரோ, “இந்த குட்டி விளையாடுவதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். சோ கியூட்” என்றுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement