Viral Video - இந்த இயந்திரத்தினால் என் மகள் துடிப்பாக, மகிழ்ச்சியாக, தாயின் குரலைக் கேட்பவளாக இருக்கிறாள்.
Viral Video - காது கேளாத ஒரு குழந்தைக்கு காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்படுகிறது. தன் அம்மா பேசுகிறாள். இந்த உலகில் அந்த பச்சிளம் பெண் குழந்தை கேட்கும ஒலி தன் அம்மாவினுடையது. எப்படி இருக்கும்… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது குழந்தை.
ஜியார்ஜினா என்னும் பெயருடைய அந்த குழந்தையின் அப்பா ஹாரோகேட், தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை எங்கள் மகளின் காது கேட்கும் இயந்திரத்தை ஆன் செய்தபோது,” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தன் அம்மா லூசி பேசுவதை கேட்கும் ஜியார்ஜினா, எழுப்பும் சத்தம், இசைபோல எங்கும் நிறைக்கிறது.
தி டெலிகிராஃப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி, ஜியார்ஜினாவுக்கு இரண்டு காதுகளும் கேட்காது என்று கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு, காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் தன் மகள், சத்தம் கேட்கும் போது எப்படி ரியாக்ட் செய்கிறாள் என்பதை ஜியார்ஜினாவின் தந்தை பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் தளத்தில் மட்டும் ஜியார்ஜினாவின் வீடியோவுக்கு 7 லட்சம் வியூஸ். பலரும் அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர்.
“காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்தினால், ஒரு லைட் பல்பு ஆன் செய்யப்பட்டதுபோல இருக்கிறது அவளுக்கு. மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.
இந்த இயந்திரத்தினால் என் மகள் துடிப்பாக, மகிழ்ச்சியாக, தாயின் குரலைக் கேட்பவளாக இருக்கிறாள்.
இப்படி இயந்திரம் பொருத்தப்படுவதால் ஜியார்ஜினா மிகவும் மகிழ்ச்சியாகவும் உயிரோட்டமுடனும் மாறுகிறாள்,” என்கிறார் ஜியார்ஜினாவின் தந்தை ஆடிசன் ஆனந்தம் ததும்ப.
Click for more
trending news