हिंदी में पढ़ें Read in English
This Article is From May 14, 2020

2 தலை கொண்ட அதிசய ஆமைக் குட்டி: அரிய வீடியோ!!

தற்போதைக்கு ஆமைக் குட்டியின் இரு தலைகளும் உணவு உட்கொண்டு வருகிறது. ஆனால், இந்தக் குட்டி தொடர்ந்து உயிர் வாழ்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது. 

Advertisement
விசித்திரம் Edited by

இதைப் போன்று இரண்டு தலைகள் கொண்டு பிறக்கும் உயிரினம் Polycephaly என்று அழைக்கப்படுகிறது.

இரண்டு தலை கொண்ட உயிரினங்கள் பற்றியெல்லாம் சினிமாவில்தான் காட்டப்படும் என்றில்லை, நிஜத்திலும் இதைப் போன்ற சம்பவங்கள் அரிதினும் அரிதான சமயங்களில் நடக்கின்றன. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், இரண்டு தலைகள் கொண்ட் ஆமைக் குட்டி கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆமைக் குட்டியை காட்டில் கண்டுபிடித்த நபர் அதை, The Virginia Living Museum இடம் ஒப்படைத்துள்ளார். அந்த மியூசியம் தங்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஆமைக் குட்டி குறித்தான வீடியோவைப் பகிர்ந்துள்ளது. 

இதைப் போன்று இரண்டு தலைகள் கொண்டு பிறக்கும் உயிரினம் Polycephaly என்று அழைக்கப்படுகிறது. பாலூட்டி உயிரினங்களில் இதைப் போன்று இரட்டைத் தலை கொண்டு குட்டிகள் பிறப்பது அரிதாகவே நடக்கும் என்றும், சில நேரங்களில் அதற்கான சாத்தியங்கள் இருக்கும் என்றும் கூறுகிறது The Virginia Living Museum. ‘சில நேரங்களில் ஆமைக் குட்டியின் ஒரு பக்கத்தில் அடுத்தடுத்து இரு தலைகள் இருக்கும். மிகச் சில நேரங்களில், ஓட்டின் எதிரெதிர் திசைகளில் இரண்டு தலைகளுடன் ஆமைப் பிறக்கும்,' என்று விளக்குகிறது மியூசியம்.

வீடியோவைப் பார்க்க:

தற்போதைக்கு ஆமைக் குட்டியின் இரு தலைகளும் உணவு உட்கொண்டு வருகிறது. ஆனால், இந்தக் குட்டி தொடர்ந்து உயிர் வாழ்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது. 

Advertisement

“மிகச் சிறந்த மருத்துவ சேவை செய்தாலும் இந்த ஆமைக் குட்டி தொடர்ந்து உயிர் வாழ்வது கடினம்தான்,” என்று ஹெர்பட்டாலஜி குரேட்டர் டிராவிஸ் லாங், டெய்லி மெயில் செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார். 

அவர் மேலும், “சில நேரங்களில் இதைப் போன்று இரு தலைகளுடன் பிறக்கும் ஆமைக் குட்டிகளுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பது கூட தெரியாது. சிக்கல் அதிகமாகும்போது தான் தெரியவரும்.

Advertisement

இரண்டு தலைகளும் உடலின் அசைவுகளை கட்டுப்படுத்த முயல்வதால் நடப்பது, நீச்சல் அடிப்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைச் செய்வது கூட கடினம்தான். 

உதாரணத்திற்கு இடது பக்கம் உள்ள தலை இடது கால்களை கட்டுப்படுத்துகின்றன. வலது தலை, வலது கால்களை கட்டுப்படுத்துகின்றன. தலை வளர வளர, உடலைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று இரு தலைகளும் ஒன்றிணைந்து முடிவு செய்ய வேண்டும். ஒத்துழைப்பு இல்லையென்றால் சாதாரண விஷயங்களை செய்வது கூட சிரமமாகிவிடும்,” என்று எச்சரிக்கிறார்.

Advertisement

எத்தனைத் தடைகள் இருந்தாலும், தங்களால் இயன்ற அத்தனையும் செய்து ஆமைக் குட்டியை உயிரோடு வைத்திருக்க நடவடிக்கை எடுப்போம் என்று The Virginia Living Museum தெரிவிக்கிறது. 


 

Advertisement