Read in English
This Article is From Jan 09, 2020

Viral Video: 4வது மாடியில் குறுகிய பாதையில் நடக்கும் சிறுமி

இந்த வீடியோவை சிறுமியின் வீட்டிற்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் வசித்த சுற்றுலா பயணி ஒருவர் எடுத்துள்ளார்.

Advertisement
விசித்திரம் Edited by

பலரும் பெற்றோரை விமர்சித்துள்ளனர்.

உயிரை உறைய வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 4 வது மாடியில் உள்ள வீட்டில் பெற்றோர்கள் குளிக்கும் நேரத்தில் சிறு குழந்தை ஒன்று  வீட்டிற்கு வெளியே உள்ள சிறு பாலத்தில் நடந்து செல்லும்  காட்சி காண்போரை பதற வைத்துள்ளது.

இந்த வீடியோவில் குழந்தை ஒன்று குறுகிய பாதையில் ஓடி நடந்து செல்வதை காணலாம். சிறுமி ஜன்னலுக்கு வெளியே உள்ள குறுகிய பாதையில் நடந்து பால்கனிக்கு செல்கிறாள். பின் மீண்டும் பால்கனியிலிருந்து ஜன்னலுக்கு திரும்புவதைக் காட்டுகிறது. 

இந்த வீடியோ ‘ஐ லவ் டெனெர்ஃப்' என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. அங்கு இது 3.4 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. 25,000க்கும் மேற்பட்ட அதிர்ச்சிகரமான கருத்துகளையும் சேகரித்துள்ளது. “பெற்றோர்கள் குளித்துக் கொண்டிருந்த நேரத்தில்,  இந்த குறுநடை போடும் குழந்தை வெளியேறுகிறாள்.” என்று வீடியோவுக்கு தலைப்பிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்தனர். 

Advertisement

“சிறுமி ஓடுகிறாள் நல்வாய்ப்பாக அவள் விழவில்லை” என்று கமெண்டுகளில் ஒருவர் எழுதியுள்ளார். “என் வயிறுதலை கீழாகிவிட்டது” என்று ஒருவர் கூறியுள்ளார்.  பலரும் பெற்றோரை விமர்சித்துள்ளனர். 

இந்த வீடியோவை சிறுமியின் வீட்டிற்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் வசித்த சுற்றுலா பயணி ஒருவர் எடுத்துள்ளார். 

Advertisement

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து பெற்றோரைத்தேடினர். அவர்கள் ஸ்பெயினில்தான் இருக்கிறார்களா அல்லது வெளியூர் சென்று விட்டார்களா என்று தெரியவில்லை. 

Advertisement