கடைசியில் பெண்ணை உயிருடன் வீரர்கள் மீட்டனர்.
New Delhi: மத்திய ஆயுத காவல் படை வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஜம்மு-காஷ்மீரின் டாங்மார்க் நகரின் பாரமுல்லாவில் வியத்தகு வகையில் மீட்பு நடவடிக்கை ஒன்று நடந்தது.
ஏ.என்.ஐ வெளியிட்ட வீடியோவில் மத்திய ஆயுத காவல் படையின் ஐந்து அதிகாரிகள் பணியில் இருந்தபோது ஆற்றில் ஒரு பெண் அடித்துச் செல்வதை பார்த்தனர்.
உடனடியாக ஒருவர் ஆற்றின் உள்ளே குதித்து பெண்ணைக் காப்பற்ற முயல ஆற்றில் நீர் வேகமாக சென்றதால் அந்த பெண் தொடர்ந்து அடித்து செல்லப்பட மற்ற வீரர்கள் ஆற்றில் இறங்கி அரண் போல் நின்று அந்தப் பெண்ணை காப்பாற்றுவதை பார்க்கலாம்.
மத்திய ஆயுத காவல்படையின் 176 வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர்.