This Article is From Aug 26, 2020

12 வருடங்கள் கழித்து குட்டி, பேரக்குட்டிகளைப் பார்க்கும் தாய் யானை! நெகிழ்ச்சியான படங்கள்!!

போரி யானை தனது குட்டியையும், பேரக்குட்டியையும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சந்தித்துள்ளது

12 வருடங்கள் கழித்து குட்டி, பேரக்குட்டிகளைப் பார்க்கும் தாய் யானை! நெகிழ்ச்சியான படங்கள்!!

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாய் யானை, தனது குட்டி, பேரக்குட்டிகளைத் தொட்டுப்பார்க்கும் புகைப்படம்

ஜெர்மனியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாய் யானை, தனது குட்டி, பேரக்குட்டிகளைத் தொட்டுப்பார்க்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் ஹாலே நகரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு போரி என்ற பெண் யானை பெர்லினில் இருந்து கொண்டு வரப்பட்டது. அப்போது தானா அதன் குட்டி விட்டுவிட்டு, யானையை மட்டும் கொண்டு வந்தனர். அதன்பிறகு, தானாவும் 2 கன்றை ஈன்றது.  அதன் பெயர் தாமிகா, எலானி ஆகும்.

இந்த நிலையில், போரி யானை தனது குட்டியையும், பேரக்குட்டியையும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சந்தித்துள்ளது. தாமிகா, எலானி என்ற பேரக்குட்டிகளையும், தானா குட்டியும் பார்த்த போரி யானை பேரானந்தம் அடைந்தது. தனது தும்பிக்கையால் குட்டியையும், பேரக்குட்டிகளையும் தடவி கொடுத்தது.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை ஹாலே மிருகக்காட்சிசாலை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இந்த போட்டோ இணையதளத்தில் தற்போது வைரலாகி பரவி வருகிறது.

தாய் யானை தனது குடும்பத்துடன் ஒன்று சேர்வதை குறித்த நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளையும், அன்பையும் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் மிருகக்காட்சிசாலைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துகளிட்டு வருகின்றனர்.

Click for more trending news


.