বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 24, 2020

இல்லை, நீங்கள் படத்தில் பார்ப்பது பாம்பு இல்லை… இந்த அரிய வகை உயிரினம் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

இந்த காணொலிக் காட்சி பகிரப்பட்டதிலிருந்து சுமார் 3 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.

Advertisement
விசித்திரம் Edited by

இந்த காணொலிக் காட்சி பகிரப்பட்டதிலிருந்து சுமார் 3 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.

தங்களுக்குத் தெரியாத உயிரினம் பற்றி வரும் வீடியோ மற்றும் தகவல்கள் இணையவாசிகளை அதிகம் கவரும். அப்படியொரு வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதலில் பாம்பு போன்று தோன்றும் அந்த உயிரினம், பாம்பு இல்லை என்பது மட்டும்தான் பலருக்கும் தெரிகிறது. ஆனால், அது என்னது என்பதற்குப் பலரிடமும் பதில் இல்லை. 

வீடியோவில் பாம்பின் வால் போன்ற ஒன்று முதலில் நெளிகிறது. தொடர்ந்து பார்க்கும்போது இன்னொரு வால் பகுதி தோன்றுகிறது. புரியாமல் திகைப்பில் பார்த்துக் கொண்டே இருந்தால், நண்டின் ஓடு போல தட்டையான ஒரு நடுப்பகுதி இருக்கிறது. அந்த நடுப்பகுதியோடு இணைந்து ஆக்டோபஸுக்கு இருப்பது போல ஐந்து கால்கள் வளைந்து வளைந்து நெளிகின்றன. இதுதான் முதலில் பாம்பு போன்று காட்சியளித்தது என்பது புலப்படுகிறது. ஒரு கட்டத்தில் தண்ணீருக்குள் மறையும் அந்த உயிரினம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது. 

ஆனால் வீடியோ முடிந்தபிறகு நம்மை துருத்திக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி, ‘அது என்ன உயிரினம்?' என்பதுதான். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தவரும் அதே கேள்வியைத்தான் பதிவிட்டுள்ளார். வீடியோவைப் பார்க்க:
 

இந்த காணொலிக் காட்சி பகிரப்பட்டதிலிருந்து சுமார் 3 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன. பலரும் அதிர்ச்சி கமென்டுகளை இட்டு வருகின்றனர். சில கருத்துகள் இதோ.

பலரும் தங்கள் வாய்க்கு வந்ததை பதிலாக பதிவிட்டனர். ஆனால் சிலர் இது ஒரு Brittle Star அல்லதி Ophiuroid என்னும் உயிரினம் என்பதை சரியாக கண்டுபிடித்துள்ளனர். 

Advertisement

 Brittle Star என்னும் உயிரினம், ஸ்டார் மீன் வகைகளில் ஒன்று. சுமார் 2,000 வகையுள்ள பிரிட்டிள் ஸ்டார் உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் இந்த உயிரினம், தன் பெரிய கால்களை வைத்து கடல் அடிமட்டத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பயணிக்கும்.
 

Advertisement