This Article is From Jun 29, 2020

17 அடி நீள அனகோண்டா பாம்பை கையால் பிடிக்க முயன்ற நபர் - நடுங்கவைக்கும் வைரல் வீடியோ!

இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் மீண்டும் பகிரப்பட்டதிலிருந்து பல லட்சம் வியூஸ்களைக் குவித்து வருகின்றன. சிலரது ரியாக்‌ஷன்களைப் பார்க்க.

17 அடி நீள அனகோண்டா பாம்பை கையால் பிடிக்க முயன்ற நபர் - நடுங்கவைக்கும் வைரல் வீடியோ!

டெய்லி மெயில் அளிக்கும் தகவல்படி, பிரேசில் நாட்டின் நதியில் இந்த சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது

பலரைப் பார்த்தவுடன் பதபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ, பல முறை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலான ஒன்றுதான். ஆனால், அதற்கு மீண்டும் ஒரு வைரல் அலை உருவாகியுள்ளது. 

டெய்லி மெயில் அளிக்கும் தகவல்படி, பிரேசில் நாட்டின் நதியில் இந்த சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. சந்தா மரியா என்னும் ஆற்றில் சிர்லேய் ஒலிவிரியா, அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்று கொண்டிருக்கும்போது சுமார் 17 அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு தென்பட்டுள்ளது. 

அதன் வாளைப் பிடித்து இழுத்துள்ளார் போர்க்ஸ். தொடர்ந்து அதைப் பிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட, அவர்களின் படகு தாறுமாறாக அலைபாய்கிறது. இந்த சம்பவத்தின்போது போர்க்ஸின் மனைவிர் ஒலிவிரியா, ‘அதைவிட்டுவிடுங்கள். ஓ மை காட்!' என்று கத்துகிறார். எப்படியாவது இந்த மனிதர்களிடம் தப்பிக்க வேண்டும் என்று பாம்பு திமிறுகிறது. ஒரு கட்டத்தில் போர்க்ஸின் பிடியிலிருந்து  நழுவி தப்பிச் செல்கிறது அனகோண்டா பாம்பு. இந்த மொத்த சம்பவமும் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. 

வீடியோவைப் பார்க்க:
 

இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் மீண்டும் பகிரப்பட்டதிலிருந்து பல லட்சம் வியூஸ்களைக் குவித்து வருகின்றன. சிலரது ரியாக்‌ஷன்களைப் பார்க்க.

இந்த சம்பவம் தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் அளிக்கும் தகவல்படி, அனகோண்டா பாம்பைப் பிடிக்க முயன்ற 3 பேருக்கும் தலா 600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

உலகிலேயே தென் அமெரிக்காவில் நாட்டில் மட்டும் வாழும் மிகப் பெரிய உயிரினம் அனகொண்டா பாம்புகள். இந்த வீடியோவில் வரும் பாம்பானது, மஞ்சள் அனகொண்டா வகை பாம்பு என்று சொல்லப்படுகிறது. நீர் நிலைகளிலேயே வாழும் இந்த உயிரினம் தன் இரையை பிடியில் இறுக்கிக் கொன்று உட்கொள்ளும். 


 

Click for more trending news


.