Read in English
This Article is From Jul 30, 2020

முதன் முதலாக ஐஸ் கிரீம் சாப்பிடும் பூனை..செம்ம ரியாக்ஷன்.. வைரல் வீடியோ

ஐஸ்கிரீம் சாப்பிடும் பூனையின் வைரல் வீடியோ

Advertisement
விசித்திரம் Posted by

பூனைக்கு ஐஸ்கிரீம் கொடுக்கலாமா.. வாருங்கள் பார்க்கலாம்

பூனை ஒன்று முதன்முதலாக ஐஸ் கிரீம் சாப்பிட்டு, குளிர்ச்சியைத் தாங்க முடியாமல் பூனை திணறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

பொதுவாக வீட்டில் பால், பால் பொருட்கள் இருந்தால் போதும். பூனை நைசாக வந்து யாரும் இல்லாத போது பாலைக் குடித்து விட்டுச் சென்று விடும். இதனாலேயே பல வீடுகளில் பால், மீன் போன்றவற்றை பூனையிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். 

ஆனால், சில வீடுகளில் பூனையை செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். அதன் சேட்டைத்தனத்தை ரசித்து பொழுபோக்குவார்கள். இன்னும் சிலர் பூனையின் விளையாட்டை வீடியோ எடுத்து யூடியூப், பேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் பெறுவார்கள். 

அந்த வகையில், தற்போது பூனை ஒன்று முதன்முதலாக ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பூனையின் உரிமையாளர் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் அருகில் பூனை இருக்கிறது. பின்னர், ஒரு ஸ்பூன் ஐஸ் கிரீமை பூனைக்கும் அவர் கொடுக்கிறார்.

முதலில் சற்று மோப்பம் பிடித்த பூனை, பால் வாடை வந்ததும் லபெக்கென் ஐஸ்கிரீமை வாயில் கவ்வியது. அவ்வளவு தான். ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை முதன்முதலாக பூனை அப்போது தான் கண்டிருக்கும் போல. நாவில் ஐஸ்கிரீம் அப்படியே இருக்க, பூனை செய்வதறியாமல் தலையை அங்குமிங்குமாய் ஆட்டுகிறது. 

ஐஸ் கிரீம் சாப்பிடும் பூனை:

இந்த வீடியோவை ஓய்வு பெற்ற கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்தார். பின்பு, இந்த வீடியோ வைரலாக பரவி சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. 

சில பூனை ஆர்வலர்கள் இது குறித்து  கருத்து தெரிவிக்கையில், பூனைக்கு ஐஸ் கிரீம் கொடுப்பது நல்லதல்ல என்று கூறுகின்றனர்.  கால்நடை மருத்துவர்கள் இதை மருத்துவ ரீதியாக அணுகுகின்றனர். அவர்கள் கூறுகையில், பூனை ஐஸ்கிரீம் சாப்பிட்டப் பிறகு இவ்வாறு நடந்து கொள்வதற்குப் பெயர் மூளை உறைதல் என்கின்றனர். அதாவது, Brain Freeze எனப்படுகிறது.

Advertisement