This Article is From Jul 29, 2020

இதுவல்லவா சந்தோஷம்... வைரலான சிறுவர்களின் 'ராட்டினம் சுற்றும்' வீடியோ!

சிறு விஷயங்கள் கூட பெரிய அளவிலான சந்தோஷத்தை கொடுக்கும் என்பதற்கு உதாரணம் தான் இந்த வீடியோ

இதுவல்லவா சந்தோஷம்... வைரலான சிறுவர்களின் 'ராட்டினம் சுற்றும்' வீடியோ!

வெட்டப்பட்ட மரத்தில் ராட்டினமாடும் சிறுவர்களின் வைரல் வீடியோ

ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் சந்தோஷம் இருக்கும். நம்மில் பலர் கிடைக்காததை எண்ணி வருந்திக் கொண்டே இருப்போம். மாறாக இருப்பதை வைத்து எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்க மாட்டோம். 

இப்படியான உலகத்தில் மூன்று சிறுவர்கள் வெறும் மரத்தண்டில் கயிறு கட்டி, நாங்கள்தான் உலகில் சந்தோஷமாக இருக்கிறோம் என்று ராட்டினம் ஆடுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வீடிபாவில், தி வெட்டப்பட்ட மரம் உள்ளது. அதன் முனையில் மூன்று சிறுவர்களும் கயிறுகட்டிக் கொண்டனர். பின்னர், மூன்று பேரும் மூன்று கோணத் திசையில் நின்று கொண்டு, ஒரே நேரத்தில் மரத்தை சுற்றி ஓடுகின்றனர். ஒரு கட்டத்தில் அப்படியே கயிற்றைப் பிடித்து தொங்கி சுற்றுகின்றனர். 


எந்தவித கவலையும் இல்லாமல், சிறுவர்கள் உற்சாகமாக ராட்டினமாடும் இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். உடனே அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ வைரலானது.  சிறு விஷயங்கள் கூட பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். அதற்கு உதாரணம்தான் இந்த  சிறுவர்கள் என்று சாகு குறிப்பிட்டுள்ளார்.

வெட்டப்பட்ட மரத்தில் ராட்டினமாடும் சிறுவர்களின் வீடியோ:

இந்த வீடியோ டுவிட்டரில் இதுவரையில் 20 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. 2,600க்கும் மேற்பட்ட லைக்ஸ் பெற்றுள்ளது. சிறு வயது சந்தோஷத்தை நினைவுப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

Click for more trending news


.