போலீஸ் வாகனத்தில் ஏறி பேப்பர் சாப்பிடும் ஆடு
அமெரிக்காவில் ஆடு ஒன்று போலீசாரின் காருக்குள் நுழைந்து, ஆவணங்களை தின்றச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் டக்ளஸில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர், ஜார்ஜியா மாகாணத்திற்கு அலுவல் வேலை காரணமாக சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டுக்குச் செல்வதற்காக தனது போலீஸ் காரை சாலையோரம் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், வேலை முடிந்ததும் காரை எடுக்கும் போது காருக்குள் ஒரு ஆடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த ஆடு காவல்துறை ஆவணங்களை சாப்பிட்டு, மென்று கொண்டிருந்தது. இதனைக் கண்டு பதறிய அந்த பெண் காவல்துறை அதிகார, ஆட்டை விரட்ட முயற்சித்தார். ஆனால், ஆடு சிறிதும் பயப்படாமல் தொடர்ந்து காகித ஆவணங்களை ருசி பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த சம்பவம் அவரது உடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதவாகியுள்ளது. பின்னர், அவர் பணியாற்றும் காவல்அலுவலகம் இந்த வீடியோவைப் பார்த்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டது.
இதுதொடர்பாக பெண் போலீஸ் கூறுகையில், பணி நிமித்தமாக தினமும் பல பேருடைய வீட்டிற்குச் சென்று வருவதாகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வதால் காரை லாக் செய்யாமல் அப்படியே நிறுத்தி விட்டு தான் செல்வதாகவும் கூறினார். மேலும், சம்பவத்தன்று காருக்குள் ஆடு புகுந்தது மட்டும், துரதிர்ஷ்டவசமாக நடந்து விட்டதாக கூறினார்.
இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. வீடியோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே வைரலாகத் தொடங்கிவிட்டது. சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ளது, 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.
Click for more
trending news