திமிங்கலத்தில் ஏறி சவாரி செய்யும் மனிதர்
குதிரை சவாரி போல், கடலில் திமிங்கலத்தில் ஏறி ஒருவர் சவாரி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகில் மற்ற ஜீவராசிகள் மனிதர்களுடன் பழகி வருகின்றன. மனிதர்களும் அவைகளைப் பழக்கப்படுத்திக் கொள்கிறான். ஆனால், நாய், பூனை, கிளி இவ்வாறு சிறிய உயிரினங்களுடன் மட்டும் தான் நெருங்கி பழகுகிறோம். சிலர் பயங்கரமான விலங்குகளைக் கூட பழக்கப்படுத்தி விடுகிறார்கள். சிங்கத்துடன் பழகுவது, புலியுடன் பழகுவது போன்ற வீடியோக்களைப் பார்த்திருப்போம்.
ஆனால், சவூதியில் பெருங்கடலில் அபாயகரமான திமிங்கலத்தையே ஒருவர் பழக்கப்படுத்தி, அதில் சவாரி செய்து வருகிறார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.
அதில், ஜாகி அல் சபஹய் என்ற என்பவர் படகில் இருந்து கொண்டு திமிங்கலத்துக்காக காத்திருக்கிறார். ஒரு சில விநாடிகளில், அவர் ஏறுவதற்கு வசதியாக ஒரு பெரிய திமங்கலம் வந்து கடலின் மேற்புரத்தில் வந்து நீந்தி நிற்கிறது.
பின்னர், கடலில் குதித்த அவர் திமிங்கலத்தின் மீது அமர்ந்து, அதனோடே கடலில் ஒரு ரவண்டு செல்கிறார். இந்த வீடியோ பலருக்கு பதற்றத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜாகி திமிங்கலத்தின் மீது ஏறும் போது, அவருடைய நண்பர் அதை செல்போனில் படம்பிடிக்கிறார். அப்போது, பாதுகாப்பாக ஏறும்படியும், அது உன்னைக் கடித்து குதறிவிடும் என்றும் எச்சரிக்கிறார்.
திமிங்கல சவாரி வீடியோ:
இந்த வீடியோ டுவிட்டரில் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இவ்வாறு திமிங்கல சவாரி செய்வது புதிதல்ல என்கின்றனர். நேஷனல் ஜியோகிராபியின் கூற்றுபடி, உலகில் மிகநீளமான மீன் திமிங்கலமாகும். சுமார் 40 அடி நீளம் வரையில் வளரக்கூடியது.
Click for more
trending news