சுமார் 30 நொடிகள் பட்டத்துடன் காற்றில் பறந்த சிறுமி
தைவானில் பட்டத்துடன் 3 வயது சிறுமி காற்றில் பறந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்கும் விதமாக அமைந்துள்ளது. .
தைவான் நாட்டில் அடிக்கடி பட்டம் விடும் திருவிழா நடைபெறும். அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள நான்லியாவ் என்ற கடற்கரை பகுதியில் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமி, எதிர்பாரதவிதமாக ஒரு ராட்சத பட்டத்தில் சிக்கினார்.
இதனையடுத்து பட்டத்துடன் சேர்ந்து சிறுமியும் காற்றில் பறந்தார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு, சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், பட்டம் உடனே காற்றில் மேலேழுந்து விட்டது.
பின்னர், சிறிது நேரம் கழித்து பட்டம் தானாகவே தரையிறங்கியது. அதிலிருந்து சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அவளுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவியது.
இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, காற்றில் பறந்த சிறுமியின் பெயர் லின் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 30 நொடிகள் அவள் பட்டத்துடன் காற்றில் பறந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news