நீலநிறப் பாம்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பாம்பானது கொள்ளை கொள்ளும் அழகாக இருக்கும் அதே சமயதில் அது ஆபத்து விளைவிக்கும் தன்மையும் கொண்டது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த அரியவகை பாம்பைக் கண்டால் மக்கள் அனைவரும் குதுகலிக்கின்றனர். உலகிலே பல வகையான பாம்புகள் உள்ளனர். ஆனால் நீல நிறப் பாம்புகள் இவ்வுலகில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். பிரகாசமான நீல நிற பாம்பின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் அதன் அழகு குறித்து இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். சிவப்பு ரோஜாவின் மீது அமர்ந்திருக்கும் நீல பாம்பின் அழகை பார்த்து பார்த்து வர்ணித்து வருகின்றனர். இந்த பாம்பானது பார்க்க அழகாக இருந்தாலும், இதன் விஷமானது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த பாம்பு கடித்தால் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுத்தும்.
.
இது குறித்து மாஸ்கோ உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறும்போது,” இந்த நீல வகை பாம்புகள் வெள்ளை உதட்டை கொண்டிருக்கும். இது இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோரில் காணப்படும் ஒரு அரியவகையானது ஆகும். இந்த வகை பாம்புகள் பச்சை நீறத்தில் அதிகளவில் காணப்படும். ஆனால் இந்த பாம்பானது அரிதிலும் அரிதாக நில நிறத்தில் காணப்படுகிறது” என்றனர்.
"சில ஜோடி நீல நிற பாம்புகள் பச்சைப் பாம்பு குட்டிகளை ஈனும்.. வெள்ளை உதடு கொண்ட பாம்புகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் பாம்பு குட்டிக்ளைப் பெற்றெடுக்கிறது" என்று மாஸ்கோ உயிரியல் பூங்கா.பொது இயக்குனர் ஸ்வெட்லானா அகுலோவா கூறினார் .
டுவிட்டரில் வெளியான வீடியோவானது ஒரே நாளில் 52,000 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ரெடிட்டில், இது 2.2 மில்லியனுக்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த பாம்பானது அசாதாரணமாக அழகாக இருப்பதாகவும், ஆனால் மற்றவர்கள் அதிலிருந்து விலகி இருக்குமாறு நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Click for more
trending news