வைரலாகி வரும் வீடியோ காட்சியில் ஓடுதளத்தில் ஓடி வரும் ஹனாவை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன
விமானத்தை நூலிழையில் தவறவிட்ட பெண் ஒருவர் எப்படியாவது விமானத்தைப் பிடித்துவிட வேண்டும் என ஓடுதளத்தில் விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்தோனேஷியாவின் பாலி விமான நிலையத்திலிருந்து ஜகார்த்தா செல்லும் ‘சிட்டிலிங்க்' விமானம் தனது பயணத்தைத் துவக்கத் தயாராகியது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய ஹனா என்ற பெண் தனது விமானப் பயண நேரத்துக்கு வரவில்லை.
விமான நிலைய அதிகாரிகளின் தகவல் அடிப்படையில் அப்பெண் பயணத்துக்குக் குறித்த நேரத்தில் வாயிலுக்கு வரவில்லை என்றும் விதிமுறைப்படி மூன்று முறை அழைப்பு விடுத்தும் வராததால் விமானம் கிளம்பத் தயாராகி உள்ளது.
ஆனால், விமானம் கிளம்புவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் நுழைவு வாயிலில் நுழைந்த அப்பெண் வேகமாக பாதுகாவலர்களையும் மீறி ஓடுதள பாதை நோக்கி விரைந்துள்ளார்.
வைரலாகி வரும் வீடியோ காட்சியில் ஓடுதளத்தில் ஓடி வரும் ஹனாவை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
ஆனால், விமானம் கிளம்பத் தயாரானதால் எப்படியாவது அதைப் பிடித்துவிட எண்ணி ஓடிய ஹனாவை விமான நிலைய பணியாளர்கள் சமாதானம் செய்து வைத்து அடுத்த விமானத்தில் அவர் பயணம் செய்ய ஏற்பாடு செய்து வழியனுப்பி வைத்தனர்.
Click for more
trending news