“ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர்.
கொரோனா வைரஸ் வருவதற்கு முன்னரே நம்மை எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. அதை மக்களுக்கு எளிமையாகச் சொல்ல வியட்நாமைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவர் வித்தியாசமான நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒருவர் கொரோனாவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, எப்படி கை கழுவ வேண்டும் என்று நடனத்தின் வாயிலாகவே சொல்லித் தரப்படுகிறது. அதை ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்பான யுனிசெஃப் (UNICEF) பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து, பாராட்டி வருகின்றனர்.
“வியட்நாமைச் சேர்ந்த நடனக் கலைஞர் குவாக் அஃப்ங் உருவாக்கியுள்ள இந்த கை கழுவுவதைச் சொல்லித் தரும் வீடியோ மிகச் சிறப்பாக உள்ளது. உங்கள் கைகளை சோப் மற்றும் நீர் கொண்டு கழுவுவதுதான் கொரோனாவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி,” என்று வீடியோவுடன் பகிர்ந்துள்ளது யுனிசெஃப்.
வீடியோவில் வரும் பாட்டின் பெயர் “Ghen Co Vy”. இந்தப் பாடலை, இசைக் கலைஞர்கள் காக் ஹுங் மின் மற்றும் எரிக் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.
கொரோனா வைரஸால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தாலும், நெட்டிசன்ஸுக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்துள்ளது.
“எனக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்துள்ளது. வைரஸிலிருந்து தங்களை எப்படிக் காப்பது என்று மக்களுக்குச் சுலபமாகச் சொல்லித் தருகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி,” என்று ஒரு ட்விட்டர் பயனர் சொல்ல,
இன்னொருவர், “மருத்துவமனைகள் இப்படிச் சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்,” என்கிறார்.
“ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாகச் சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news