This Article is From Jun 02, 2020

டோர் ஓப்பன் பண்ணா கெஸ்ட் இல்ல… ரெண்டு முதலையோட சண்டை… அரண்டுபோன பெண்! #ViralVideo

வீடியோ எடுக்கும்போதே கெஷல், “இந்த முதலைகள் சண்டையிடுகின்றன… ஓ மை காட் இவை சண்டையிடுகின்றன. ஒரு முதலை இன்னொன்றைக் கடித்துவிட்டது,” என்று பயத்தில் பிதற்றுகிறார். 

டோர் ஓப்பன் பண்ணா கெஸ்ட் இல்ல… ரெண்டு முதலையோட சண்டை… அரண்டுபோன பெண்! #ViralVideo

கெஷல், முதலைகள் சண்டையிடும் வீடியோவை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு சுமார் 40,000 வியூஸ்கள் குவிந்துள்ளன.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம், அலிகேட்டர் வகை முதலைகளுக்குப் பெயர் போன இடம். அங்கு உள்ள ஃபோர்ட் மியர்ஸ் என்னும் இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார் சூசன் கெஷல். கடந்த வாரம் செவ்வாய் கிழமை காலை எழுந்த அவர், காபி அருந்திக் கொண்டே அன்றைய தினத்தைத் தொடங்கியுள்ளார். திடீரென்று வாசல் கதவில் ‘டம்…' என்ற சத்தம். கதவைத் திறக்காமல் யார் என்று பார்த்துள்ளார் கெஷல். இரண்டு தடிமனான அலிகேட்டர் முதலைகள்… அதிர்ச்சியில் உறைந்த கெஷல், முதன் முறையாக தன் வீட்டிற்கு வெளியில் முதலைகள் இருப்பதை வீடியோ எடுத்துள்ளார். 

வீடியோ எடுக்கும்போதே கெஷல், “இந்த முதலைகள் சண்டையிடுகின்றன… ஓ மை காட் இவை சண்டையிடுகின்றன. ஒரு முதலை இன்னொன்றைக் கடித்துவிட்டது,” என்று பயத்தில் பிதற்றுகிறார். 

அதிர்ச்சியூட்டும் வீடியோவைப் பார்க்க:

கெஷல், முதலைகள் சண்டையிடும் வீடியோவை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு சுமார் 40,000 வியூஸ்கள் குவிந்துள்ளன.

பலரும் அதிர்ச்சியில் வீடியோவுக்குக் கீழ் கமென்ட் பதிவிட்டு வருகிறார்கள். 

ஒருவர், “வாவ் இது பார்க்க ஆச்சரிமயாம உள்ளது. பயமாகவும் உள்ளது,” என்கிறார். 

இன்னொருவர், “அப்ப்ப்பா… எவ்ளோ பெருசு,” என்கிறார். 

ஃபாக்ஸ் நியூஸுக்கு கெஷல், “நான் 15 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகிறேன். ஆனால், என் கதவுக்கு வெளியில் முதலைகளைப் பார்ப்பது இதுவே முதல் முறை. முதலைகள் குறித்து ஃப்ளோரிடா வன விலங்குத் துறையிடம் தெரிவித்தேன். ஆனால், அவை இரண்டும் என் வீட்டிற்கு வெளியில் இருந்து சென்றுவிட்டன.

இரண்டு அலிகேட்டர்களும் சுமார் 20 நிமிடங்கள் சண்டையிட்டன. பின்னர் பக்கத்தில் இருக்கும் குட்டையை நோக்கி சென்றிருக்கலாம். என் முன் கதவை அவை பாழ்படுத்திவிட்டன,” என்று வருத்தப்படுகிறார். 
 
Click for more trending news

.