ஒரு சில கணங்கள் சுற்றி இருப்பவர்கள் கூச்சல் எழுப்பிய நிலையில், அந்தப் பெண் குளத்திலிருந்து கையை உயர்த்தி எழுகிறார்.
அமெரிக்காவில் நடந்த சம்பவத்தின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெய்லி மெயில் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, இந்த வீடியோவானது கடந்த 4 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றுதான் அமெரிக்காவின் சுதந்திர தினமாகும். அதைக் கொண்டாடும் வகையில் நடந்த பார்ட்டியில்தான் இந்த அதிர்ச்சி வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோவில், ஒரு பெண்ணும் ஆணும் வீட்டின் மாடியில் நிற்பது தெரிகிறது. கீழே நீச்சல் குளம். இருவரும் மாடியிலிருந்து குளத்தில் குதிக்க எத்தனிக்கிறார்கள். அந்த ஆண் அதிர்ஷ்டவசமாக குளத்தில் தொப்பென்று விழுகிறார். ஆனால் அந்தப் பெண்ணால் அதைச் செய்ய முடியவில்லை. மாடியிலிருந்து தடுக்கி விழும் பெண், கீழே இருக்கும் கூரை மீது மோதுகிறார். அப்படியே தலைக் குப்புற நீச்சல் குளத்தில் விழுகிறார். அந்தப் பெண் கிட்டத்தட்ட தன் கழுத்தை முறித்துக் கொள்ளும் வகையில் தரைக்கு நெருக்கமாக சென்று குளத்தில் விழுகிறார்.
ஒரு சில கணங்கள் சுற்றி இருப்பவர்கள் கூச்சல் எழுப்பிய நிலையில், அந்தப் பெண் குளத்திலிருந்து கையை உயர்த்தி எழுகிறார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வீடியோவைப் பார்க்க:
1 கோடி பார்வைக்கு மேல் கிடைத்துள்ள இந்த காணொலிக்குக் கீழ் பலரும் அதிர்ச்சிகர கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
பலரும், இப்படி மாடியிலிருந்து குதிப்பது முட்டாள்தனமானது என்று விமர்சித்தனர். சிலர், அந்தப் பெண் குளத்தில் விழுந்த பின்னர் யாரும் சென்று பார்க்காததை விமர்சித்தனர். இன்னும் சிலரோ, கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், இப்படி ஒன்று கூடி பார்ட்டியில் ஈடுபடுவதை சாடியிருந்தனர்.
குறிப்பாக ஒரு ட்விட்டர் பயனர், “அந்தப் பெண் கிட்டத்தட்ட தன் கழுத்தை முறித்துக் கொண்டார். ஆனால், ஒரு நபர் கூட அசைந்து கொடுக்கவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்க முயலவில்லை. இதைப் போன்ற தொற்றுப் பரவல் நேரத்தில் இப்படி பார்ட்டி செய்பவர்களிடம் என்ன எதிர்பார்த்துவிட முடியும்,” என்று நொந்து கொள்கிறார்.
Click for more
trending news