குறுகலான இடத்தில் கார் பார்க்கிங் செய்யும் வீடியோ
கேரளாவில் பாலத்தின் மேல், குறுகலான இடத்தில் ஒருவர் கார் பார்க்கிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் மானந்தவாடியைச் சேர்ந்தவர் பிஜூ. இவர் தனது நண்பரின் வெள்ளை நிற இன்னோவா காரை, ஒரு சாலையோரம் இருந்த குறுகிய இடத்தில் பார்க்கிங் செய்கிறார். சரியாக காரின் நீளம், அகலத்தில் அந்த பாலம் உள்ளது. பாலத்தில் ஒரு இன்ச் தவறினாலும், குழிக்குள் கார் விழுவது நிச்சயம்.
இப்படியான ஆபத்தான இடத்தில், காரை மெதுவாக ரிவர்ஸ் எடுத்தும், முன்னோக்கிச் சென்றும், பொறுமையாக, நுணுக்கமாக தனது இன்னோவா காரை பார்க்கிங் செய்தார்.
இந்த வீடியோ டுவிட்டர் பக்கத்தில் வைரலாகியது. இந்த வீடியோ எடுக்கப்பட்டுதும் பிஜூவுக்குத் தெரியாது. வீடியோ வைரலான பிறகே, தனது கார் பார்க்கிங் திறமை சமூகவலைதளங்களில் வைரலாகியிருப்பதை உணர்ந்தார்.
இது குறித்து பிஜூ கூறுகையில், ஏற்கெனவே பேருந்து ஓட்டிய அனுபவம் தனக்கு இருப்பதாகவும், எர்ணாகுளம் - கண்ணுர் வழியில் பல வருடங்களாக பேருந்து ஓட்டியதாகவும் கூறுகிறார். காரின் நீளம், அகலம் தனது நினைவில் அப்படியே வரைபடமாக பதிந்ததால், குறுகலான இடத்திலும் காரை பார்க் செய்ய முடிந்ததாக தெரிவித்தார்.
குறுகலான இடத்தில் காரை நிறுத்துவது, ஒரு அசாத்தியமான திறமை என்றாலும், அதில் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இதுபோன்று யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்
Click for more
trending news