Read in English
This Article is From Mar 16, 2020

கிணற்றில் விழுந்த சிறுத்தை- அதையும் காப்பாற்றி தங்களையும் பாதுகாத்த ‘ஜீனியஸ்’ மக்கள்- வைரல் வீடியோ!

Viral Video: இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 10,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

Viral Video: பலரும் இந்த வீடியோவைப் பார்த்து, சிறுத்தையை பத்திரமாக மீட்ட மக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். 

சிறுத்தையைக் கண்டாலே பலருக்கு அச்சம் வரும். அப்படிப்பட்ட காட்டு மிருகம், மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் விழுந்துவிட்டது. அதற்காகச் சிறுத்தைக்குப் பயந்து அதை அங்கேயே விட்டுவிட முடியாது அல்லவா. ஆகையால், அந்த சிறுத்தையை மீட்க மிகவும் நேர்த்தியாக யோசித்துச் செயல்பட்டுள்ளனர் மக்கள். இது குறித்தான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரவீன் கஸ்வான் என்னும் இந்திய வனத் துறை அதிகாரி ஒருவரால், ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநில சிவ்புரியில் உள்ள கிணற்றில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 1 நிமிடம் ஓடும் வீடியோவில், கட்டில் போல தளத்தில், இரு பக்கமும் கயிறு கட்டப்பட்டுள்ளது. அதில் ஏணி போல படிக்கட்டுகள் உள்ளன. சிறுத்தை கட்டில் போல இருக்கும் தளத்தில் லாகவமாக அமர்ந்து கொள்ள, இரு பக்கத்திலிருந்தும் அதை இழுக்கின்றனர் மக்கள். கிணற்றுக்கு மேலே வரவர, ஒருபக்கம் சிறுத்தை மெல்ல ஏறுகிறது. அந்தப் பக்கத்தில் இருக்கும் நபர்கள் பொறுமையாக அங்கிருந்து நகர்கின்றனர். இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் முடிந்தது அந்த மீட்புப் பணி. 

வீடியோவைப் பார்க்க:

கஸ்வான் இந்த வீடியோ குறித்து, “இந்த மீட்புப் பணியின் போது சிறுத்தையும் ஒத்துழைத்துள்ளது. சில நேரங்களில் மீட்பாளர்களையும் மிருகங்கள் தாக்கிவிடும் சம்பவங்கள் நடந்துள்ளன,” என்று கூறியுள்ளார். 

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 10,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 1,200 பேர் லைக் தட்டியுள்ளனர். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து, சிறுத்தையைப் பத்திரமாக மீட்ட மக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement
Advertisement