அலிகேட்டர் வகை முதலைகள் இரண்டு, ஒரு பெரிய மர நாரையை (Wood Stork) சுற்றிவளைத்து இரையாக்கப் பார்க்கின்றன.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் Gatorland என்னும் அமைப்பு, சமீபத்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தது. அந்த வீடியோ அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பல மூளைகளில் வைரலாக பரவி வருகிறது. காரணம், அந்த வீடியோவில் வரும் சம்பவம் அப்படிப்பட்டது.
அலிகேட்டர் வகை முதலைகள் இரண்டு, ஒரு பெரிய மர நாரையை (Wood Stork) சுற்றிவளைத்து இரையாக்கப் பார்க்கின்றன. ஆனால் தன் நீளமான கொடுக்கை வைத்துத் தாக்கும் முதலைகள் மீது எதிர் தாக்குதல் நடத்துகிறது நாரை. நீரில் ராஜா தான் தான் என்பதை உணரும் முதலைகள், அப்படியே நாரையை தண்ணீருக்குக் கொண்டு வருகின்றன. பின்னாலேயே செல்லும் நாரை முன்பைவிட முதலைகளை ஆக்ரோஷமாக தாக்குகிறது. ஒரு கட்டத்தில் இந்த நாரைப் பறவையை ஒன்றும் செய்ய முடியாது என்று முதலைகள் பின்வாங்குகின்றன. இந்த சம்பவம் குறித்து சில நொடிகள் ஓடும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடியோவுடன், “பயப்பட வேண்டாம். அனைத்து மிருகங்களும் நன்றாகவே இருக்கின்றன. இயற்கையைப் பற்றி ஒரு சிறிய பாடம். சிறிய அலிகேட்டர்கள் இரையை வேட்டையாட ஆர்வமாக இருக்கின்றன. ஆனாலும் பெரிய நாரைக்கு அவையால் ஈடு கொடுக்க முடியவில்லை. வீடியோவில் நீங்கள் கேட்கும் ‘கிளிக்' சத்தம் நாரையின் கொடுக்கிலிருந்து வருகிறது,” என்றுப் பதிவிடப்பட்டுள்ளது.
வீடியோவைப் பார்க்க:
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து பல்லாயிரம் பார்வைகளைக் குவித்து வருகிறது. பலரும் கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
“எனக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது. அந்த சிறிய அலிகேட்டர்கள் தங்கள் இடத்தைப் பாதுகாக்க முனைப்பாக இருக்கின்றன,” என்கிறார் ஒருவர்,
இன்னொருவரோ, “ஒரு நாள் அந்த அலிகேட்டர்கள், இந்தப் பறவையை சாப்பிடத்தான் போகிறது,” என்கிறார்.
Click for more
trending news