বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 03, 2020

10 அடி நீள பாம்புடன் சண்டையிடம் தாய் பறவை; தன் முட்டைகளைக் காப்பாற்ற பாசப் போராட்டம்!!

Viral Video - இந்த சண்டையில் மரங்கொத்தியும் பாம்பும் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. .

Advertisement
விசித்திரம் Edited by

Viral Video - ட்விட்டிரில் இந்த வீடியோவுக்கு 11,000 பார்வைகள் கிடைத்துள்ளன. 

Highlights

  • 11 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ இது
  • மீண்டும் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது
  • பலரும் வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து வருகிறார்கள்

தாயின் அன்பிற்கு எதுவும் இணையில்லை என்பார்கள். அதற்குச் சாட்சியாக இருக்கிறது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று. மரங்கொத்திப் பறவையொன்று, தான் இட்ட முட்டைகளைக் காப்பாற்ற 10 அடி நீளப் பாம்புடன் போராடுகிறது. பெரு நாட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை, இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா மீண்டும் பகிர்ந்துள்ளார். 

வீடியோவில், தன் கூட்டுக்குள் இருக்கும் பாம்பை உசுப்பி வெளியே கொண்டு வருகிறது மரங்கொத்தி. வெளியே தலை நீட்டும் பாம்பை மரங்கொத்தி, விடாமல் கொத்துகிறது. பாம்பும் மரங்கொத்தியைச் சீண்டுகிறது. 4 முறை கொத்து வாங்குகிறது மரங்கொத்தி. ஒவ்வொரு முறை தாக்கப்பட்ட பின்னரும் தரையில் வீழ்கிறது மரங்கொத்தி. ஆனால், மீண்டும் மீண்டும் எழுந்து பாம்புடன் சண்டையிட்டுத் தன் முட்டையைக் காக்கப் போராடுகிறது. 

மெட்ரோ நியூஸ் அளிக்கும் தகவல்படி, 2009 ஆம் ஆண்டு, இஸ்ரேலின் அசாஃப் அட்மோடியா என்னும் சுற்றுலாவாசியால், பெரு நாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. யூடியூபில் இந்த வீடியோவுக்கு 80 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. 

Advertisement

இந்த வீடியோ குறித்து அசாஃப், “இந்த வீடியோவில் அந்த பாம்பு, பறவைக் குஞ்சுக்கோ, முட்டைக்கோ வந்துள்ளது.  மரங்கொத்தி வெளியே போயிருந்த சமயம், பாம்பு கூட்டுக்குள் புகுந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு தாயின் உள்ளுணர்வால் உந்தப்பட்ட மரங்கொத்தி, பாம்பைத் தாக்கத் தொடங்குகிறது. அதனால்தான் அந்தப் பறவை மீண்டும் மீண்டும் பாம்பைத் தாக்குகிறது,” என்கிறார்.

வீடியோவைப் பகிர்ந்த நந்தா, “தாயின் பாசத்துக்கு இந்த உலகில் எதுவும் ஈடில்லை. பாம்புடன் சண்டையிட்டுத் தன் குஞ்சுகளைக் காக்கும் மரங்கொத்தி,” என்று பதிவிட்டுள்ளார். 

Advertisement

வீடியோவைக் கீழே பார்க்கவும்:
 

ட்விட்டிரில் இந்த வீடியோவுக்கு 11,000 பார்வைகள் கிடைத்துள்ளன. 

இந்த சண்டையில் மரங்கொத்தியும் பாம்பும் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. .

Advertisement