This Article is From Mar 19, 2020

Work From Home செய்கிறீர்களா..? - உங்கள் குழந்தைகளை இப்படி சமாளிக்கலாமே!

கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மற்றவர்களுக்கு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு

Work From Home செய்கிறீர்களா..? - உங்கள் குழந்தைகளை இப்படி சமாளிக்கலாமே!

சோசியல் டிஸ்டன்சிங் என சொல்லப்படும் இந்த செயலைப் பின்பற்ற, மற்றவர்களிடத்திலிருந்து சுமார் 3 அடியாவது தள்ளியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால், பலரும் வீட்டிலிருந்து பணிபுரியும் ‘Work From Home'- ஆப்ஷனை பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, உலகின் பல இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் குழந்தைகள் இருக்கும் சூழலில் பல பெற்றோர்களும் வேலை செய்ய வேண்டி வரும். இதனால் ஏற்படும் வேடிக்கையான விஷயங்கள் பற்றியும் அதை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றியும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. 

இது குறித்து ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் என்பவர், ஒரு படத்தைப் பகிர அது ட்விட்டர் தளத்தில் படுவைரலானது. அவர் பகிர்ந்த படத்தில், ஒரு பெண் கணினி முன் அமர்ந்து வேலை பார்க்க, குழந்தைகளின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டுள்ளன. இது பலருக்குச் சிரிப்பை வரவழைத்துள்ளது

இந்த ட்வீட் வைரலாக, அவர் தொடர்ந்து இன்னொரு வீடியோவையும் பகிர்ந்தார். அதில் எப்படி ஒரு தந்தை தன் மகளிடமிருந்து தப்பிக்கிறார் என்று காட்சிகள் மூலம் விவரிக்கப்பட்டிருந்தது. 

இந்த வீடியோ பதிவிற்குப் பலர் ‘சிரிப்பை அடக்க முடியவில்லை' என்பது போலக் கருத்திட்டிருந்தனர்.  

இதைத் தவிரவும் பலரும், குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் இன்னல்களை நகைச்சுவைத் ததும்ப வெளிப்படுத்தி வருகிறார்கள். அதையும் பாருங்கள்:

கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மற்றவர்களுக்கு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. சோசியல் டிஸ்டன்சிங் எனச் சொல்லப்படும் இந்த செயலைப் பின்பற்ற, மற்றவர்களிடத்திலிருந்து சுமார் 3 அடியாவது தள்ளியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சுலபமாகப் பரவக்கூடிய இந்த கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, பல துறைகளைச் சார்ந்த ஊழியர்களும் வீட்டிலிருந்தபடியே பணி செய்து வருகிறார்கள். 

மத்திய அரசும் கடந்த திங்கட்கிழமை, நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Click for more trending news


.