Read in English
This Article is From Nov 21, 2018

டி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து பெரும் கோடீஸ்வர எம்.எல்.ஏ. விலகல் – தெலங்கானாவில் பரபரப்பு

அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மருமகன்தான் கட்சியை விட்டு வெளியேறியிருக்கும் விஷ்வேஷ்வர் ரெட்டி.

Advertisement
தெற்கு ,
Hyderabad:

தெலங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) ஆட்சியில் இருந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து பெரும் கோடீஸ்வர எம்.எல்.ஏ. விஷ்வேஷ்வர் ரெட்டி விலகியுள்ளார்.

அவரது நடவடிக்கை கட்சியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சீனியர் லீடர்கள் அவருக்கு முக்கியத்துவம் அளிக்காததே இதற்கு காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷ்வேஷ்வர் ரெட்டியை பொருத்தவரையில் அவரது பின்புலம் பிரமாண்டமாக உள்ளது. தனக்கு ரூ. 500 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக அவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார். செல்வாக்கு மிக்க ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் விஷ்வேஷ்வர் ரெட்டி.

Advertisement

இவர், அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் சி. ரெட்டியின் மருமகன். இவரின் மனைவி சங்கீதா ரெட்டி, அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். என்ஞ்னியராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த விஷ்வேஷ்வர் கடந்த 2013-ல் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்தார். அவரது தாத்தா கொண்டா வெங்கட ரங்கா ரெட்டி சுதந்திர போராட்ட வீரர். பின்னாளில் அவர் ஆந்திராவின் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார்.

டி.ஆர்.எஸ். கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் விஷ்வேஷ்வர் ரெட்டிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவர் 3 பக்க ராஜினமா கடிதத்தை எழுதி முதல்வர் சந்திரசேகர ராவிடம் அளித்திருக்கிறார்.

Advertisement

இந்த விவகாரம் சந்திர சேகர ராவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. “ முடிந்தால் விஷ்வேஷ்ர் ரெட்டியின் வெளியேற்றத்தை தடுத்தி நிறுத்திப் பாருங்கள்” என்று காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.

117 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. அவையில் தற்போது டி.ஆர்.எஸ். கட்சிக்கு 63 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 22 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர்.

Advertisement