Read in English
This Article is From Jul 10, 2020

‘சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவில் இடமில்லை’ – அமைச்சர் ஜெயக்குமார்

கடந்த மாதம் 25-ம்தேதி பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை ஆகுவார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை கிளப்பியது.

Advertisement
இந்தியா

சசிகலா தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Chennai:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவில் இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் சசிகலா விடுதலை தொடர்பான பதிவை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், 'சசிகலாவே அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அதிமுகவில் மட்டுமல்ல அரசிலும் இடம் கிடையாது' என்று தெரிவித்தார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 பிப்ரவரி 15-ம்தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 25-ம்தேதி பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை ஆகுவார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை கிளப்பியது.

Advertisement


இந்த நிலையில்தான் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிக்கலா குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குதான் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எவருக்கும் அதிமுகவில் இடமில்லை என்று பதில் அளித்துள்ளார். 


முன்னதாக தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், மணியன் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று பதில் அளித்தார். 

Advertisement


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்புக்கு வந்தார். இதன்பின்னர் கடந்த 2017, செப்டம்பர் 12-ம்தேதி அவர் அதிமுக பொதுக்குழுவால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த 2019, ஜூன் 13-ம்தேதியில் இருந்து அதிமுக இரட்டைத் தலைமையால் இயக்கப்பட்டு வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement