ரஷ்ய அதிபர் புதினை, நேற்று டெல்லியில் சந்தித்தார் மோடி
New Delhi: ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று அமெரிக்கா, எச்சரித்த பின்னரும், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி - அதிபர் விளாதிமிர் புதின் இடையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக, அரசு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. அது குறித்தான அதிகாரபூர்வ செய்தி இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம். தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்:
- புதினுடன், ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசாவ், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரவ், வர்த்தக அமைச்சர் டெனிஸ் மந்தராவ் ஆகியோர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ்-400 ஏவுகணைகள், மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் சீனா மட்டும் தான், எஸ்-400 ஆயுதங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் போடக் கூடாது என்று எச்சரித்து வந்தாலும், இந்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்யும் என்று தான் கூறப்படுகிறது.
- அமெரிக்காவின், காட்சா சட்டப்படி, வடகொரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டால், வரி விதிப்புகள் போடலாம் என்று நடைமுறை இருக்கிறது. இந்த சட்டத்தைத் தான் இந்தியா மீது அமெரிக்கா பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் உலக அளவில் நிலவி வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று உரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் புதின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் இன்று சந்தித்துப் பேசுவார்.
- ரஷ்ய தரப்பு, இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர், ’20-க்கும் மேற்பட்ட ராணுவ ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்யும்’ என்று கூறியுள்ளது.
- 4 கிரிவாக்-க்ளாஸ் ப்ரிகேட்ஸ் ரக ஆயுதங்களையும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் என்று கூறப்படகிறது.
- ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மட்டும் தான், இந்தியா வருடாந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறது.
- இந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையில் நடக்கும் மூன்றாவது சந்திப்பு இது. இதற்கு முன்னர் ரஷ்யாவின் சோச்சியிலும், பிரிக்ஸ் மாநாட்டிலும் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர்.
- அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமானிடம் கேட்டபோது, ‘மற்ற நாடுகளுடனான உறவைப் பொறுத்தவரை இந்தியா, தனது இறையாண்மையை இழக்காத வகையில் தான் செயல்பட்டு வருகிறது. அது அப்படியே தொடரும்’ என்று கூறியுள்ளார்.