This Article is From Apr 11, 2019

மாற்றத்திற்காக துணிச்சலுடன் வாக்களியுங்கள்: ஜெகன்மோகன் ரெட்டி

மாற்றத்திற்காக வாக்களியுங்கள், பயமில்லாமல் வாக்களியுங்கள் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பயமில்லாமல் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

New Delhi:

ஆந்திர பிரதேசம் புலிவேந்துலா பகுதியில் இன்று அதிகாலை வாக்களிக்க வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், முதல்முறை வாக்காளர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார். மேலும், முதல்முறை வாக்காளர்கள் மாற்றத்திற்காக துணிச்சலுடன் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாநிலங்களிலும், 2 இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது.

இதில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆந்திரா பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்தவகையில், இன்று காலை ஆந்திர மாநிலம் புலிவேந்துலா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், மக்கள் நிச்சயம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில், நான் கணித்தபடி முடிவுகள் இருக்கும் என முழு நம்பிக்கையுடன் உள்ளேன். நிச்சயம் மாற்றம் நிகழும் என்று அவர் கூறினார்.

முன்னதாக அவர், என்டிடிக்கு அளித்த பேட்டியின் போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பெரும்பான்மை வகிக்காது என்றும் பெரும்பாலும் தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் அதனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் எந்த ஒரு கட்சியுடனும், தலைவர்களுடனும் கூட்டணி அமைக்கவோ, ஆதரவு அளிக்கவோ தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத காரணத்தினால் மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. சந்திரபாபு நாயுடு என்டிடிக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

இதேபோல், சந்திரசேகர ராவ்வும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இவர்கள் அனைவருமே ஒன்று தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்கள் ஆந்திரா பிரதேச மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டியிருந்தார்.

.