This Article is From Oct 24, 2018

தெலுங்கானாவில் தேர்தல் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள்!

தெலுங்கானாவில் உடல் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 5 லட்சம் என்று அறியப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி தெலுங்கானாவில் தேர்தல் நடைபெறவுள்ளது

தெலுங்கானாவில் தேர்தல் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள்!

கண் பார்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாக்காளார் அடையாள அட்டை தயார் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

Hyderabad (Telangana):

தெலுங்கானாவில் தேர்தல் தினத்தன்று உடல் ஊனமுற்றோருக்கு பிரெய்லி முறையிலான வாக்காளர் அடையாள அட்டை, சக்கர நாற்காலிகள், சாய்வு பாதைகள் மற்றும் இலவச போக்குவரத்து இதுபோன்ற சில வசதிகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளது. 

உடல் ஊனமுற்றோர் நலத்துறையின் கண்காணிப்பாளார் பி.சைலஜா ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், வாக்களிக்கும் நாளன்று உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக தன்னார்வலர்களை தயார் செய்து வருவதாக கூறினார்.  

இந்தியாவில், கண்பார்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாக்காளார் அடையாள அட்டை தயார் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. மேலும், இலவச போக்குவரத்து இதுபோன்ற சில வசதிகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளது. 

எல்லா வாக்குச்சாவடிகளிலும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய உள்ளதாக தெலுங்கானாவின் தலைமை தேர்தல் அதிகாரி ஓம் பிரகாஷ் ராவத் தெர்வித்தார். 

தெலுங்கானாவில் உடல் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 5 லட்சம் என்று அறியப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி தெலுங்கானாவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் புள்ளிவிவரங்கள், எலெக்ட்ரானிக் வாக்கு பதிவு இயந்திரம், சட்ட ஒழுங்கு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளார்கள் தெளிவாக விளக்கியதன் மூலம்தேர்தலுக்கான, தயார்நிலையை கண்டு திருப்தி அடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

தேர்தல் நல்லமுறையில், எந்த வித அசம்பாவிதமின்றி நடைபெற இன்னும் கடினமாக உழைக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறித்தியுள்ளது.
 

.