বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From May 06, 2019

5-ம் கட்ட தேர்தல்: காஷ்மீர் வாக்குசாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல், வங்கத்தில் கலவரம்: 10 ஃபேக்ட்ஸ்!

General elections 2019: ராஜஸ்தானில் இன்று நடக்கும் 12 தொகுதிகளுக்கான தேர்தலோடு, அம்மாநிலத்தில் அனைத்து இடங்களுக்குமான தேர்தல் முடிவடைகிறது. 

Advertisement
இந்தியா Edited by

General Election: லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Highlights

  • நாடு முழுவதும் 7 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
  • காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு
  • வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
New Delhi:

2019 Lok Sabha Polls: 2019 ஆம் ஆண்டின் லோக்சபா தேர்தலின், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மூ காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு அருகில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜம்மூ காஷ்மீரில் கையெறிக் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ராஜ்வர்தன் ரத்தோர் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க்கிறது. லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் 5-ம் கட்ட தேர்தலில் 51 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 51 தொகுதிகளில், 2014 ஆம் ஆண்டு 40 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இன்றோடு 424 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடியும். மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு மே 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கும். மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

5-ம் கட்ட தேர்தல் குறித்து 10 ஃபேக்ட்ஸ்:

1.உத்தர பிரதேசத்தில் இருக்கும் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் உள்ள 12 தொகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள 7 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஜம்மூ காஷ்மீரில், இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

Advertisement

2.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து 4வது முறையாக அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறையும் அவர் அங்கு வெற்றி பெறுவார் என நம்புகிறார். அவருக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி களம் காண்கிறார். 2014 ஆம் ஆண்டும் இராணி, ராகுலுக்கு எதிராக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

3.ராகுலைப் போலவே, சோனியா காந்தியும் ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடுகிறார். 2004 ஆம் ஆண்டு ராகுலுக்காக சோனியா, அமேதி தொகுதியை விட்டுக் கொடுத்து ரேபரேலியில் போட்டியிட்டார். அப்போதிலிருந்து சோனியாதான், ரேபரேலியில் வெற்றிபெற்று வருகிறார். லக்னோவில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். 

Advertisement

4.இன்று உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு, இந்த 14 தொகுதிகளில் 12-ல் பாஜக வெற்றி பெற்றது. அமேதி மற்றும் ரேபரேலியில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றியடைந்தது. இந்த முறை மாயாவதி - அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி, இவ்விரு தொகுதிகளுக்கும் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. 

5.மாயாவதியின் சமாஜ்வாடி கட்சி, தவுராஹ்ரா, சிதாபூர், மோகன்லால்கஞ்ச், ஃபதேபூர், கைசாரஞ்ச் தொகுதிகளில் போட்டியிடுகிறது. சமாஜ்வாடி கட்சி, லக்னோ, பாண்டா, கவுஷாம்பி, பாராபங்கி, ஃபயிஸாபாத், பாஹாரய்ச் மற்றும் கோண்டா தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

Advertisement

6.ஜம்மூ காஷ்மீரின் புல்வாமா பகுதிக்கு உட்பட்ட அனாந்தங் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அந்த தொகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தத் தொகுதியில் வாக்கு சதவிகிதம் இரட்டை இலக்கை அடைவதே கடினம் எனப்படுகிறது. 

7.ராஜஸ்தானில் இன்று நடக்கும் 12 தொகுதிகளுக்கான தேர்தலோடு, அம்மாநிலத்தில் அனைத்து இடங்களுக்குமான தேர்தல் முடிவடைகிறது. 

Advertisement

8.மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் மூலம், ஆட்சிக்கு வந்த காங்கிரஸும், பாஜகவும் அங்கு 7 தொகுதிகளுக்கான தேர்தலில் மல்லுக்கட்ட உள்ளன. 

9.பிகாரில் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ராம் விலாஸ் பஸ்வானின் கோட்டையான ஹஜிபூர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கோட்டையான சாரன் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. 

Advertisement

10.மாவோயிஸ்ட் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டு ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மாலை 4 மணிக்குள்ளாக, அங்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement