சத்தீஸ்கர் தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
Raipur: சத்தீஸ்கர் மாநிலத்தில் 19 மாவட்டங்களில் இரண்டாவது கட்டமாக 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 72 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 1,079 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 1,53,85,983 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முக்கிய 10 தகவல்கள்:
- சத்தீஸ்கரில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. காங்கிரஸும், அஜித் ஜோகி - மாயாவதி தலைமையிலான கூட்டணியும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக பிரசாரம் மெற்கொண்டன.
- கடந்த 2000-ஆம் ஆண்டு, மத்திய பிரதேசத்திலிருந்து தனி மாநிலமாக சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டப் பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அஜித் ஜோகி. ஆனால், சமீபத்தில் அவர் காங்கிரஸிலிருந்து விலகி புதியக் கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து அவர் இந்து முறை தேர்தலை மாயாவதியுடன் கூட்டணி வைத்து எதிர்கொண்டுள்ளார்.
- 2003 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பாஜக-வின் ரமண் சிங்கிடம், ஜோகி தோல்வி கண்டார். அதிலிருந்து இப்போது வரை சத்தீஸ்கரில் பாஜக தான் ஆட்சி புரிந்து வருகிறது.
- இந்த முறை தேர்தலை காங்கிரஸ் தலைவர் புபேஷ் பாகல், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் டி.எஸ்.சிங் டியோ, முன்னாள் மத்திய அமைச்சர் சரண்தாஸ் மஹந்த் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
- பாஜக-வைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் பிரிமோகன் அகர்வால், ராஜேஷ் முனத் மற்றும் மாநில கட்சித் தலைவர் தர்மால் கவுஷிக் ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
- பகுஜன் சமாஜ்- அஜித் ஜோகியின் ஜேசிசி கட்சிக் கூட்டணியிலிருந்து, ஜோகியின் மனைவி ரேனு ஜோகி, அவரது மருமகள் ரிச்சா ஜோகி ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
- பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் ராகுல் காந்தியையும் அவரது குடும்பத்தினரையும் எதிர்த்துத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
- தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், ‘மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். அதிக அளவிலான மக்கள் இந்த முறை வாக்களிக்க வருவார்கள். 4வது முறையாகவும் நாங்கள் ஆட்சி அமைப்போம்' என்று முதல்வர் ரமண் சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கரில் ஊழல் மலிந்திருப்பது குறித்தும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தும் பாஜக-வை வறுத்தெடுத்தார்.
- சத்தீஸ்கர் தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்படும்.