Vyapam Case: இந்த மோசடி குறித்து விசாரித்த சிபிஐ குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
Bhopal: வியாபம் முறைகேடு வழக்கில் 31 பேரில் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்தது சிபிஐ நீதிமன்றம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மாநிலக் தொழில்கல்வி தேர்வு வாரியம் காவல்துறை காவலர் பணிக்காக தேர்வு நடத்தியது. இதில் ஆள்மாறட்டம் செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில் அரசியல்வாதிகள் அரசு உயரதிகாரிகள் தொழிலதிபர் எனப்பல்வேறு முக்கியமானோர்க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
முறைகேடு வழக்குதண்டனையை நீதிபதி எஸ்பி சாகு வழங்கினார். ராஜேந்திர நகர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் வியாபம் ஊழல் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு பணிக்குழு முதலில் அமைக்கப்பட்டதாக சிறப்பு அரசு வழக்கறிஞர் சதீஷ் தின்கர் தெரிவித்தார்.
இந்த மோசடி குறித்து விசாரித்த சிபிஐ குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.