Read in English
This Article is From Jan 04, 2020

#2020TipChallenge : ரூ. 1.4 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த அமெரிக்க பாடகர்

உணவோ அல்லது தங்குமிடங்களின் சேவைக்கு பின்பு சர்வர்களுக்கு யார் அதிகம் டிப்ஸ் கொடுப்பது என்பது தான் இந்த (#2020TipChallenge) சேலன்ஞ்.

Advertisement
விசித்திரம் Edited by

2,020 டாலரை பணத்தினை டிப்ஸாக கொடுத்துள்ளார்

சமூக ஊடகங்களில் விதவிதமான ட்ரெண்டுகள் உருவாகி வருகின்றன. தற்போது  டிப்சேலஞ்ச் என்பது ட்ரெண்டாகி வருகிறது. சிஎன்என்  செய்தியின்படி உணவோ அல்லது தங்குமிடங்களின் சேவைக்கு பின்பு சர்வர்களுக்கு யார் அதிகம் டிப்ஸ் கொடுப்பது என்பது தான் இந்த சேலன்ஞ். இந்த சவாலை செய்து முடித்துள்ள சிலரை பார்க்கலாம்.

டூடே செய்தியின் படி, அமெரிக்க பாடகரும் நடிகரும் 2020டிப் சேலஞ்சில் பங்கேற்றுள்ளார். 2,020 டாலரை பணத்தினை டிப்ஸாக கொடுத்துள்ளார். (தோராயமாக ரூ. 1.4 லட்சம்) 2019ஆம் ஆண்டின் கடைசி நாளில் இந்த டிப்ஸினை கொடுத்துள்ளார்.

பாடகர் வால்பெர்க்கின் செயல் பணியாளர் டேனியல் ஃபிரான்சோனியை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வீட்டில்லாமல் இருந்தவருக்கு இந்த பணம் சொந்த வீட்டிற்கு செல்லும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

“இது போன்ற விஷயங்கள் என்னைப் போன்றவர்களுக்கு நடக்காது” என்று ஃபிரான்சோனி அல்பேனா டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார். “இந்த பணத்தினால் குழந்தைகளுக்கும் எனக்கும் எதிர்காலத்தை உருவாக்கப் போகிறேன். தங்குவதற்கு வீடு ஒன்றினை எடுக்கப்போகிறேன். இது மிகப்பெரிய விஷயம்” என்று கூறியுள்ளார்.

டிப்ஸ் கொடுத்ததை பாடகரின் மனைவி ஜென்னி மெக்கார்த்தி அவர்களால் பகிரப்பட்டது. 2020 டிப் சேலன்ஞ்சில் 100% டிப்ஸினை  கொடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். 

Advertisement