யோகா குரு பாபா ராம்தேவ் அரசியல் குறித்த தன்னுடைய கருத்தை கூறுகையில், நல்ல ஆட்சியாளர்களால் இந்த நாடு ஆளப்படுகிறது என்பதை உறுதி செய்வது மட்டுமே தன்னுடைய கடமை என்று கூறியுள்ளார்.
2019 லோக்சபா தேர்தலில் ராம்தேவ் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பார் என்று கேட்டபோது, நான் என்னை, தேசத்தை கட்டமைக்க கல்வியை மேம்படுத்த, விவசாயம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்தியுள்ளேன். இந்திய தேசத்திற்கு சேவை செய்யக்கூடிய அரசியல் பின்புலமற்றவனாகத்தான் என்னை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய நாட்டினை நல்ல தலைவர்கள் ஆள்கிறார்கள் என்பதை உறுதிபடுத்துவதே தன்னுடைய கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா, பாபா ராம்தேவை சந்தித்து 2019ல் நடைபெற இருக்கும் தேர்தலில் தங்களது கட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய அமித்ஷா, 2014 தேர்தலில் எங்கள் கட்சியை ஆதரித்த அனைவரையும் இப்போது சந்தித்து வருகிறோம். அவர்களுடைய முயற்சியை பாராட்டுகிறோம். அதேபோல், 2019 தேர்தலிலும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.