This Article is From May 15, 2019

“பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க நினேத்தேன்!”- சயிஃப் அலி கான் ஷேரிங்ஸ்!

‘பின்ச்’ (Pinch) என்கின்ற சாட் ஷோவில் கலந்து கொண்ட சயிஃப், இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

“பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க நினேத்தேன்!”- சயிஃப் அலி கான் ஷேரிங்ஸ்!

சயிஃப் அலி கான், தற்போது ‘சாக்ரெட் கேம்ஸ்’ தொடரின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார். 

ஹைலைட்ஸ்

  • பின்ச் ஷோவில் சயிஃபை ஒருவர் விமர்சித்திருந்தார்
  • அதற்குத்தான் சயிஃப், பதில் கொடுத்தார்
  • தந்தையின் அறிவுரையின் பேரிலேயே, முடிவை மாற்றிக் கொண்டார் சயிஃப்
Mumbai:

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயிஃப் அலி கான். அவருக்கு இந்திய அரசு, கடந்த 2010 ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருதை வழங்கி கவரவித்தது. ஆனால், அந்த விருதை அப்போது அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை என்ற ரகசியத்தைத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். 

‘பின்ச்' (Pinch) என்கின்ற சாட் ஷோவில் கலந்து கொண்ட சயிஃப், இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பின்ச் ஷோவில் ஒருவர், சயிஃப் அலி கானை விமர்சித்து, “பத்மஸ்ரீ விருதை வாங்கியவர்தானே நீங்கள்” என்று கூறினார்.

அதற்கு சயிஃப், “பத்மஸ்ரீ விருதை வாங்குவது என்பது சாத்தியமில்லாத விஷயம். இந்திய அரசுக்கு லஞ்சம் கொடுக்கும் அளவுக்கெல்லாம் என் நிலை இல்லை. ஆனால், பத்மஸ்ரீ விருதை நான் வாங்கும் மன நிலையில் அப்போது இல்லை. சினிமா துறையில் இருக்கும் பல முன்னணி மற்றும் மூத்த நடிகர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்களுக்குக் கொடுக்காமல் எனக்கு கொடுக்கப்பட்டதை நினைத்து நான் வெட்கப்பட்டேன். 

அப்போது என் தந்தை, ‘இந்திய அரசு கொடுக்கும் ஒரு விருதை வேண்டாம் என்று சொல்லும் நிலையில் நீ இல்லை' என்றார். அதைத் தொடர்ந்து தான் விருதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.

நடிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். அதை நான் ஓரளவுக்கு சரியாகவும் செய்து வருவதாக கருதுகிறேன். ஒரு காலத்தில் மக்கள், ‘அந்த விருது அவருக்கு கொடுக்கப்பட்டது சரியான ஒரு விஷயம் தான்' என எண்ணுவர் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று விளக்கம் கொடுத்தார். 

சயிஃப் அலி கான், தற்போது ‘சாக்ரெட் கேம்ஸ்' தொடரின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார். 

.