Read in English
This Article is From Oct 24, 2018

நேர்மையை நிலைநாட்டவே, சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு! - அருண் ஜெட்லி

சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால், இது விசாரிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா
New Delhi:

ஒரே இரவில், சிபிஐ உயர்மட்ட அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தும் வகையில், சிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே சிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, சிபிஐ ஒரு பிரதான விசாரணை அமைப்பு. அதன் நேர்மையை பாதுகாப்பதற்காகவும், நியாயமான விசாரணை நடைபெறுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு முன் நிபந்தனை மற்றும் நியாயமான விசாரணைக்கு முற்றிலும் அவசியமானது.

சிபிஐ-யின் இரண்டு உயர் அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே இரண்டு அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்கும் என கூறியுள்ளார்.

சிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே, இரண்டு அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சிபிஐ புலனாய்வு அமைப்புக்குள் அதன் இயக்குநர் அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே பனிப் போர் நிலவி வருகிறது.

Advertisement

இதனால் வெர்மா, அஸ்தானா மற்றும் பல சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே நாகேஷ்வர் ராவ், சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement