53 வயதான ப்ரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் படித்து குடியுரிமை பெற்று அங்கு பிரதிநிதியாகியுள்ளார்.
Washington: அமெரிக்காவில் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரமிளா ஜெயபால், சுந்தர்பிச்சை குறித்து பேசியுள்ள செய்தி தற்போது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. நாடாளுமன்ற அமைச்சரவையில் சுந்தர்பிச்சை வரவழைக்கப்பட்டு டேட்டா கொள்கைகள் குறித்த விளக்கங்கள் கேட்கப்பட்டன. அப்போது அந்த நிகழ்வில் அமெரிக்க வாழ் இந்தியரான ப்ரமிளா ஜெயபாலும் கலந்துகொண்டார்
"அமெரிக்காவின் உயரிய நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சுந்தர்பிச்சை இந்தியாவில் நான் பிறந்த தமிழகத்தில் பிறந்தவர். இவ்வளவு பெருமை நம் நாட்டிக்கும், மாநிலத்துக்கும் சேர்த்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி... நன்றி சுந்தர் பிச்சை" என்று தெரிவித்தார்.
46 வயதான சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்து ஐஐடி கரஹ்பூரில் படித்து 2004ல் கூகுளில் வேலைக்கு சேர்ந்தார். 2015ல் கூகுளுக்கு சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.
53 வயதான ப்ரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் படித்து குடியுரிமை பெற்று அங்கு பிரதிநிதியாகியுள்ளார்.
சமூக வலைதலங்களில் சில தவறான வெறுக்கத்தக்க உரைகளை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்ற கேள்விக்கு '' அதனை சரியாக கையாள வேண்டிய முழு பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. குறிபிட்ட மக்களிடம் அது வெறுக்கத்தக்க விஷயமாக கருதப்பட்டால் அதனை நிக்கிவிடுவதுதான் சரி என்றார்.
மேலும் கூகுள் தேடல் எப்படி நடக்கிறது என்பது பற்றி விளக்கும் போது '' கூகுளில் முட்டாள் என தேடினால் அதிகமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் வருவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை '' எதையும் கூகுள் உள்நோக்கத்துடன் செய்வதில்லை. அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள், அதிகமான பதிவுகளில் உள்ள வார்த்தைகள் என தேடி அல்காரிதம் செட் செய்யப்பட்டிருக்கும். அதிலிருந்து சிறந்த தேர்வை கூகுள் தேர்வு செய்யும். ஒருவேளை அந்த வார்த்தையோடு ட்ரம்ப் புகைப்படம் ஒத்து போயிருக்கலாம் என்ற அர்த்தத்தில் தெரிவித்தார்.
கூகுள் சிஇஓ நீதிமன்ற குழுவுக்கு முன்னர் எப்படி கூகுள் தேடுகிறது என்று விளக்கும்போது, 200 விஷயங்களை கருத்தில் கொண்டு தேடும் என்பதையும், முடிவுகளையும் காட்டி விளக்கினார். அதில் தொடர்புடையவை, பிரபலமாக இருப்பவை என்று வரிசைப்படுத்தப்பட்டு தேடப்படும் என்றார்.