Read in English
This Article is From Oct 22, 2018

கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து செல்பி! - மன்னிப்பு கோரிய முதல்வரின் மனைவி!

கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த அம்ருதா பட்னாவிஸை தாக்கி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
நகரங்கள்

கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்தற்காக அம்ருதா பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Mumbai:

இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பலின் போக்குவரத்தை மகாராஷ்டிரா முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கடந்த 20ம் தேதி தொடங்கி வைத்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் உடன் இருந்தார்.

கப்பலில் செல்பி எடுத்துவந்த அம்ருதா பட்னாவிஸ் திடீரென்று கப்பலின் ஆபத்தான விளிம்பு பகுதிக்கு சென்று செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, பலரும் இந்த வீடியோ குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர். இதற்காக இன்று அம்ருதா பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். 

மாராத்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், நான் தவறு செய்ததாக யாரேனும் நினைத்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் யாரும் அபாயகரமான செயல்களில் ஈடுபட கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் கப்பலில் தான் செல்பி எடுத்த பகுதி பாதுகப்பானதாக தான் இருந்தது என்று கூறியுள்ளார். நான் செல்பி எடுத்த பகுதிக்கு கீழே இரண்டு படிகள் இருந்தது என்றார். 

கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் எச்சரிக்கையை மீறி செல்பி எடுத்ததாக தகவல்கள் வெளிவந்ததும், டிவிட்டரில் பலர் அம்ருதா பட்னாவிஸ் மீது சாடினர். 

2017ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 2014-2015ம் ஆண்டில் செல்பி எடுத்ததனால் உயிர் இழந்தவர்கள் ஏராளமானோர் என்று கூறப்படுகிறது.
 

Advertisement
Advertisement