பலரும் “நம்ப முடியாத ஒன்று”என்று கமெண்ட் செய்துள்ளனர்.
புளோரிடாவில் உள்ள உயிரியலாளர்கள் ஒரு பெரிய மலைப்பாம்பு கடலில் நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டனர். பிஸ்கேன் தேசிய பூங்கா காணொளி ஒன்றினை ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.
காணொளியில் வலையை பயன்படுத்தி பாம்பினை எப்படி பிடிக்கலாம் என்பதைக் காட்டியது. செவ்வாயன்று கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட மலைபாம்பு 11 அடி நீளமும் 14 கிலோ எடையும் கொண்டது.
இந்த வீடியோவை 23,000க்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். பலரும் “நம்ப முடியாத ஒன்று”என்று கமெண்ட் செய்துள்ளனர்.
பிஸ்கேன் தேசிய பூங்கா தனது பேஸ்புக் பதிவில், “கடலில் அடிக்கடி பாம்புகள் காணப்படுவதில்லை என்றாலும் நாங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம். ஆக்கிரமிப்பு இனங்களை கண்டு பிடித்து அகற்ற முடியும்” என்று அவர்கள் எழுதினர். மலைப்பாம்புகளைக் கண்டால் புகாரளிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டனர்.
Click for more
trending news