This Article is From Jun 05, 2018

சீனாவின் 98 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நகர்த்தப்பட்டது!

பணி செய்வதற்குப் போதுமான இடம் இல்லாத்தால், வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டிடத்தை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

சீனாவின் 98 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நகர்த்தப்பட்டது!

ஹைலைட்ஸ்

  • சாங்காய் நகரத்தில் 98 ஆண்டுகள் பழமையான கட்டடம் இருந்தது
  • அலுவலக அறை கட்டுவதற்காக இக்கட்டிடத்தை நகர்த்தி வைத்தனர்
  • கணினி முறையில் ஹைட்ராலிக் இயந்திரம் பயன்படுத்தட்டது
சீனாவில் கிட்டத்தட்ட நூறு வருட பழைமை வாய்ந்த கட்டிடத்தை 54 மீட்டர்கள் தள்ளி வைத்து, 90 டிகிரி அளவில் சுற்றி வைத்துள்ளனர். சாங்காய் நகரம் ஹோங்கொவ் மாவட்டத்தில், இருக்கும் கட்டிடத்தை அலுவலக அறை கட்டுவதற்காக, தள்ளிவைத்துள்ளனர் என்று சீன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. CGTN யூ-ட்யூப்பில் வெளியிட்ட டைம்-லேப்ஸ் வீடியோவில் கட்டிடம் தள்ளி எடுத்து செல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது 98 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் என நம்பப்படுகிறது. இந்தக் கட்டிடத்தை தள்ளி வைக்கும் பணி ஏப்ரல் 13 ஆம் தேதி ஆரம்பித்து ஜூன் 1 ஆம் தேதி முடிவடைந்தாக கூறபடுகிறது. CGTN அறிக்கையின்படி, கட்டிடம் 54.322 மீட்டர் தூரமும், 89.6 டிகிரியில் சுற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதற்கு முன்பாக, கட்டத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் நடைப்பெற்றன.



“கணினி முறை ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் சிறப்பு தண்டவாளம் கொண்டு கட்டிடம் தள்ளி வைக்கப்பட்டது" என்று சாங்காய் கட்டிட குழு கூறியது. 

“பணி செய்வதற்குப் போதுமான இடம் இல்லாத்தால், வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டிடத்தை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று ஷென் வேய், சாங்காய் கட்டிடக் குழு மேலாளர் கூறினார். “கட்டிடத்தின் அழகான பகுதியை மக்கள் பார்க்க வேண்டும் என்ற காரணத்தால், சுற்ற வேண்டி இருந்தது” எனக் கூறினார்.

கடந்த ஆண்டு, மத்திய சாங்காய் நகரில் கூட்ட நெரிசலை தவிர்க்க, 2000 டன் எடையுள்ள புத்தர் கோவிலை, 30 மீட்டர் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 Click for more trending news


.