This Article is From Oct 19, 2019

பாட்டியிடம் மட்டும் பணம் பறிக்காமல் முத்தமிட்ட கொள்ளையன்! சூப்பர்மார்க்கெட்டில் சுவாரசியம்

வயதான பாட்டி ஒருவரும் தன்னிடம் உள்ள பணத்தை கொள்ளையனிடம் கொடுக்க முன்வந்தார். அப்போது பணம் வேண்டாம் என்று கூறிய கொள்ளையன், 'பாட்டி நீங்க இங்க அமைதியா இருந்தாப் போதும், உங்க பணம் தேவையில்லை' என்று கூறி, பாட்டியின் நெற்றியில் முத்தமிட்டான். 

பாட்டியிடம் மட்டும் பணம் பறிக்காமல் முத்தமிட்ட கொள்ளையன்! சூப்பர்மார்க்கெட்டில் சுவாரசியம்

பாட்டியின் நெற்றியில் கொள்ளையன் முத்தமிடும் காட்சி.

.

வழக்கத்திற்கு மாறான பணம் பறிப்பு சம்பவ வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரேசிலில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் ஒருவன், அங்கிருந்த வயதான பாட்டியிடம் பணம் பறிக்காமல் அவரது நெற்றியில் முத்தமிட்டுச் சென்றுள்ளான். 

வடகிழக்கு பிரேசிலின் அமராண்டி பகுதியில் சூப்பர் மார்க்கெட்டுடன் கூடிய மெடிக்கல் ஷாப் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாயன்று மாலை 5 மணிக்கு ஆயுதங்களுடன் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள், கடையின் உரிமையாளர் சாமுவேல் அல்மெய்டாவை பிடித்து பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். 

அங்கிருந்தவர்கள் அனைவரும் பணத்தை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டார்கள். இதனால் அதிர்ந்துபோன ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் தாங்கள் வைத்திருந்த பணத்தை கொள்ளையர்களிடம் கொடுக்கத் தொடங்கினர்.

அவர்களில் வயதான பாட்டி ஒருவரும் தன்னிடம் உள்ள பணத்தை கொள்ளையனிடம் கொடுக்க முன்வந்தார். அப்போது பணம் வேண்டாம் என்று கூறிய கொள்ளையன், 'பாட்டி நீங்க இங்க அமைதியா இருந்தாப் போதும், உங்க பணம் தேவையில்லை' என்று கூறி, பாட்டியின் நெற்றியில் முத்தமிட்டான். 
 

Watch the incident unfold below:

பின்னர் கொள்ளையங்கள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 75 ஆயிரம்) மற்றும் சில பொருட்களுடன் வெளியேறினர். 

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

இதேபோன்று கடந்த மார்ச் மாதம் ஒரு சம்பவம் நடந்தது. கொள்ளையன் ஒருவன் தான் கொள்ளையடித்த பெண்ணின் வங்கிக் கணக்கை பார்த்த பின்னர், தான் கொள்ளையடித்த பணத்தை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தினான். இந்த சம்பவமும் வைரலானது. 
 

Click for more trending news


.