The video was shared by the Bengaluru city police on Facebook.
New Delhi: பெங்களூரு காவல்துறை, காவலர்களின் மன அழுத்தத்தினை குறைக்கவும், கடினப்போக்குடன் இல்லாமல் இருக்கவும் ஜூம்பா நடனத்தினை பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.
தலா 25 காவலர்கள் கொண்ட 30 குழுக்கள், கால்களை நளினமாக அசைத்து இயங்கும் ஜூம்பா நடனத்தினை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வானது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வடகிழக்கு பிரிவு காவல்துறை பிரிவில் நடந்திருக்கிறது. இதனை வீடியோவாக பெங்களூரு காவல்துறை வெளியிட்டிருக்கிறது. காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கடினப்போக்கு தன்மைக்கு ஜூம்பா நடனப் பயிற்சியின் மூலமாகத் தீர்வுகாண அவர்கள் முயன்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த பயிற்சியின் மூலமாகப் புத்துணர்ச்சியையும், அழுத்தத்திலிருந்து விடுதலையும் பெற முடியும் எனவும் அவர்கள் இதனை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தினை ஈர்த்த இந்த நடனப் பயிற்சி வீடியோ, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக வலைத்தள பயனாளர் ஒருவர் தனது கருத்தினை பகிர்ந்திருக்கிறார்.
அற்புதமான இந்த பயிற்சி காவலர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மாவுக்கும் நல்லது என்று மற்றொரு பயனாளி கருத்தினை பகிர்ந்திருக்கிறார். அமைதியான முகம் மற்றும் மனத்துடன் காவலர்களைப் பார்ப்பது அருமையாக இருப்பதாக மற்றொரு பயனாளி கருத்து பதிவிட்டிருக்கிறார்