மேஜிக் செய்யும் பாஜக தலைவர் அஜய் திவாகர்.
Rampur: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி, பாஜக தலைவர் அஜய் திவாகர் மேஜிக் செய்து வாக்குகளை சேகரித்தார். இதனை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆசம் கான். இவர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ராம்பூர் எம்எல்ஏ தொகுதி காலியானது.
இந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பாரத் பூஷன் குப்தாவை ஆதரித்து உள்ளூர் பாஜக தலைவரான அஜய் திவாகர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேஜிக் நிபுணரான அவர், மக்களிடம் மேஜிக் காட்டி பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். இதற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் மேஜிக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜய் திவாரின் மேஜிக் வீடியோ....
ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக ஆசம் கானின் மனைவி தன்சீம் பாத்திமா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதே தொகுதியில் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆசம் கான்.
Samajwadi Party MP Azam Khan is a nine-time MLA
அவர் மீது நிலம் அபகரிப்பு முதல் விலங்குகள் திருட்டு வரை என மொத்தம் 84 வழக்குகளை உத்தரப்பிரதேச போலீசார் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்குகள் கடந்த சில மாதங்களில் பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தன்மீதான வழக்குகள் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தை ஆசம் கான் நாடினார். 84-ல் 29 வழக்குகளில் அவரை கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.