This Article is From Dec 23, 2019

Watch: “1st கிளாஸ் சீட்டு என் உரிமை!”- விமானத்தில் சண்டையிட்ட பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்!

போபாலில் தரையிறங்கிய பின்னர், ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு எதிராக புகார் கொடுத்த பிரக்யா, “இந்த விமான நிறுவன ஊழியர்கள் சரியாக நடந்து கொள்வதில்லை,” என்று குற்றம் சாட்டினார். 

Watch: “1st கிளாஸ் சீட்டு என் உரிமை!”- விமானத்தில் சண்டையிட்ட பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்!

இன்னொரு பெண் பயணியோ, “இங்கு இருக்கும் எவரின் நேரம் குறித்தும் அக்கறை இல்லையா. விமானக் குழுவினரான நீங்கள் ஏன் இது குறித்து கேள்வியெழுப்பக் கூடாது?,” என்று சீறுகிறார். 

ஹைலைட்ஸ்

  • பிரக்யா தாக்கூரிடம் மக்கள் முறையிடுவது வீடியோவில் தெரிகிறது
  • தான் முன்பதிவு செய்த சீட் கிடைக்கவில்லை என்பதால் பிரக்யாவுக்குக் கோபம்
  • அது குறித்து விமான நிறுவனத் தரப்பும் விளக்கம் கொடுத்துள்ளது
New Delhi:

பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தனக்கு அவமரியாதை நடந்துவிட்டதாகச் சொல்லி அதிரவைத்தார். அதை மறுத்திருந்ததது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இந்நிலையில் டெல்லி - போபால் இடையே சென்ற அந்த விமானத்தில் நடந்தது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

வீடியோவில் பலர், “ஒரு மக்கள் பிரதிநிதியாக மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்பது உங்களது கடமையாகும். ஒரு கட்சியின் எம்பியாக இருக்கும் போதும் சுமார் 50 பேருக்கு நீங்கள் பிரச்னை தருகிறீர்கள்,” என்று அறிவுறுத்துகிறார்கள். 

இன்னொரு பெண் பயணியோ, “இங்கு இருக்கும் எவரின் நேரம் குறித்தும் அக்கறை இல்லையா. விமானக் குழுவினரான நீங்கள் ஏன் இது குறித்து கேள்வியெழுப்பக் கூடாது?,” என்று சீறுகிறார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து போபாலுக்குச் சென்ற பிரக்யா தாக்கூருக்கு தான் புக் செய்த சீட் ஒதுக்கப்படவில்லை. அதற்குக் காரணமாக விமான நிறுவனம் சொன்னது, ‘அவர் முன்பதிவு செய்த இருக்கை, அவசரகால இருக்கையாகும். அதில் வீல்சேர் மூலம் வருவோருக்கு உட்கார அனுமதிக்கப்பட மாட்டார்கள்,' என்றது. பிரக்யா, வீல்சேர் மூலம் விமானத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

போபாலில் தரையிறங்கிய பின்னர், ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு எதிராக புகார் கொடுத்த பிரக்யா, “இந்த விமான நிறுவன ஊழியர்கள் சரியாக நடந்து கொள்வதில்லை,” என்று குற்றம் சாட்டினார். 

அதே நேரத்தில் விமான நிறுவனத் தரப்போ, “பிரக்யா தாக்கூருக்கு பிரச்னை எழுந்தது வருத்தம் அளித்தாலும், பயணிகளின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்ய முடியாது,” என்று பதில் கொடுத்தனர். 

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் போபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிரக்யா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் திக்‌விஜய சிங்கை விட 3.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

தற்போது வெளியாகியுள்ள வீடியோ குறித்து பிரக்யா, “விமானம் தாமதமானதைத் தொடர்ந்து சில பயணிகள், என்னிடம் வந்து முறையிட்டார்கள். நான் ஒரு விஐபி என்ற காரணத்தினால் பிரச்னை செய்வதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், ஒரு சாதாரண நபரைப் போலத்தான் நான் பயணம் செய்தேன். சம்பவம் குறித்து போபால் விமான நிலைய இயக்குநரிடத்திலும் புகார் தெரிவித்துள்ளேன்,” என்று விளக்கம் கொடுத்தார்.

(With inputs from ANI)

.