இந்த திகிலூட்டும் வீடியோ இதுவரை 10,000 தடவைப் பார்க்கப்பட்டுள்ளது. 46,000 பேருக்கு மேல் அதை லைக் செய்துள்ளனர்.
New Delhi: புலியைக் காட்டில் பார்ப்பது இருக்கட்டும். உயிரியல் பூங்காவில் பார்ப்பதே திகிலூட்டும் அனுபவம்தான் என்பது சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஐயர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவில், வேட்டையாடும் வேட்கையில் ஓடிவரும் புலியை தற்செயலாக படம் எடுத்துள்ளார் ஒருவர். ஏன் புலி உலகிலேயே மிக அபாயகரமான மிருகம் என்பது அதன் மூலம் தெரிகிறது.
டப்ளின் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு கண்ணாடித் திரை உள்ளது. கண்ணாடித் திரைக்கு இந்தப் பக்கம் பூங்காவிற்கு வந்தவர்கள் புலியைப் பார்வையிடுகிறார்கள். அந்தப் பக்கம் மிக கம்பீரமாக புலி நிற்கிறது.
கண்ணாடித் திரையின் முன்னால் தனது மகனை உட்காரவைத்து வீடியோ எடுக்கிறார் அந்தத் தந்தை. திடீரென்று வீறுகொண்டு ஓடி வருகிறது புலி. சிறுவனக்கு அருகில் வந்து பாய்கிறது…
ஆனால், கண்ணாடித் திரை இருப்பதனால் அதில் வந்து முட்டி நிற்கிறது அந்த பிரமாண்ட விலங்கு. புலியின் ஆக்ரோஷத்தால் அரண்டு போகிறான் அச்சிறுவன்.
RobC என்னும் ட்விட்டர் பெயர் கொண்ட அந்த தந்தை, வீடியோவைப் பகிர்ந்து, “டப்ளின் உயிரியல் பூங்கா மெனுவில் என் மகன் இருந்திருக்கிறான்,” என்று வேடிக்கையாக கருத்திட்டுள்ளார்.
இந்த வீடியோவில் ஆச்சரியம் என்னவென்றால், புலி வருவதை அந்த தந்தை பார்த்த பின்னரும் மகனைத் தொடர்ந்து வீடியோவுக்குப் போஸ் கொடுக்கச் சொல்கிறார். இந்த திகிலூட்டும் வீடியோ இதுவரை 10,000 தடவைப் பார்க்கப்பட்டுள்ளது. 46,000 பேருக்கு மேல் அதை லைக் செய்துள்ளனர்.
அதே நாளில் உயிரியல் பூங்காவிற்குச் சென்ற வேறொரு குடும்பத்தையும் அந்தப் புலி பயமூட்டியுள்ளது. 3 குழந்தைகள் கண்ணாடித் திரைக்கு முன்னர் வீடியோவுக்குப் போஸ் கொடுக்க, அவர்களை நோக்கி பாய்கிறது அந்தப் புலி. மீண்டும் கண்ணாடித் திரையில் மோதிக் கொண்டு ஏமாற்றம் அடைகிறது.
அந்த வீடியோவை கீழே பாருங்கள்:
இந்த வீடியோவை எடுத்த பால் மோரான், குழந்தைகளிடம், “அது உங்களை நோக்கி வருகிறது,” என்று எச்சரிக்கிறார். ஒரு குழந்தை பின்னால் திரும்பிப் பார்க்கிறது. புலி பாய்வதால் அதிர்ச்சியடைந்த அந்தக் குழந்தை, “ஓ மை காட்!,” என்று அதிர்ச்சியில் உறைகிறது.
Click for more
trending news