This Article is From May 28, 2020

புல்வாமாவில் வெடிகுண்டுகளுடன் கைப்பற்றப்பட்ட கார் வெடிக்க வைப்பு! - வீடியோ

Pulwama: போலி பதிவு எண்ணைக் கொண்டிருந்த அந்த கார் சோதனை சாவடி அருகே வந்த போது போலீசார் வண்டியை நிறுத்துமாறு ஒட்டுநரிடம் சைகை காட்டியுள்ளனர். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார்.

புல்வாமாவில் வெடிகுண்டுகளுடன் கைப்பற்றப்பட்ட கார் வெடிக்க வைப்பு! - வீடியோ

Pulwama: புல்வாமாவில் வெடிகுண்டுகளுடன் கைப்பற்றப்பட்ட கார் வெடிக்க வைப்பு! - வீடியோ

ஹைலைட்ஸ்

  • புல்வாமாவில் வெடிகுண்டுகளுடன் கைப்பற்றப்பட்ட கார் வெடிக்க வைப்பு!
  • இந்த பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • வெடிகுண்டு வெடித்ததால், அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்தன.
New Delhi:

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சோதனைச் சாவடியில் 20 கிலோ வெடிகுண்டுகளுடன் சென்ற காரை பாதுகாப்பு படையினர், தடுத்து நிறுத்தினர். இதனால், நேற்றைய தினம் நடைபெற இருந்த பெரும் பயங்கரவாத தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், வெடிபொருட்கள் நிறைந்த அந்த காரை பாதுகாப்பு படையினர், வெடிக்க வைத்தனர். இந்த பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

போலி பதிவு எண்ணைக் கொண்டிருந்த அந்த கார் சோதனை சாவடி அருகே வந்த போது போலீசார் வண்டியை நிறுத்துமாறு ஒட்டுநரிடம் சைகை காட்டியுள்ளனர். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால், போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். எனினும், வண்டியை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமெடுத்துள்ளார். தொடர்ந்து, ஒரு கட்டத்தில் காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் மட்டும் தப்பிச்சென்றுள்ளார். 

இந்த சம்பவம் நடந்த ஒரு சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருந்து கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், வெடிகுண்டு அகற்றும் குழுவினரால், கார் வெடிக்க வைக்கப்பட்ட பின்னர், மேகம் போல் புகைமூட்டம் சூழப்பட்டு காணப்படுகிறது. இந்த பெரும் வெடிகுண்டு வெடித்ததால், அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்புக்கு முன்னதாகவே, அப்பதியில் உள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் டைரக்டர் ஜெனரல் தில்பாக் சிங் கூறும்போது, கைப்பற்றப்பட்ட அந்த கார், நேற்று இரவு முழுவதும் கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து, அருகிலுள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த காரை வேறு இடத்திற்கு நகர்த்தி செல்வது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், வெடிகுண்டு நிபுணர்கள் அதனை அங்கேயே வெடிக்க செய்தனர் என்றார்.

வெடிகுண்டுகள் நிறப்பப்பட்ட காருடன் பயங்கரவாதி உலாவி வருவதாக புல்வாமாவில் உள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ராணும், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து செயல்பட்டுள்ளது. 

வெள்ளை நிற காரில் வெடிபொருட்கள் ஏற்றிச்செல்லப்படுவதாக புலனாய்வு அமைப்புகள், தகவல் தெரிவித்திருந்தன. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப் படையினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காருடன் மோதினர். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பை எதிர்த்து இந்தியா விமானப்படை தாக்குதல்களை மேற்கொண்டது. 

.