ஒட்டகச்சிவிங்கி மற்றும் நாயின் நட்பு மிக்க புகைப்படங்களை ஒரு வாரத்திற்கு முன் பகிர்ந்துள்ளனர்
தென்னாப்பிரிக்காவில் ஒரு நாய் மற்றும் ஒட்டகச்சிவிங்கிக்கும் இடையே ஏற்பட்டுள்ள நட்பு இணைய உலகில் பலரையும் கவர்ந்துள்ளது. ஜாஸ் என்ற ஒட்டகச்சிவிங்கி பிறந்த 2 முதல் 3 நாட்களில் தனது தாயால் கைவிடப்பட்டது. பின்னர், “மிகவும் நீரிழப்பு மற்றும் பலவீனமாக காணப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் உள்ள தி ரினோ அனாதை இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டது.
தி ரினோ இல்லத்தில் உள்ள பாதுகாப்பு நாயான ஹண்டருடன் நட்புடன் பழகி வருகிறது. இருவரின் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தி ரினோ அனாதை இல்லம் அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒட்டகச்சிவிங்கி மற்றும் நாயின் நட்பு மிக்க புகைப்படங்களை ஒரு வாரத்திற்கு முன் பகிர்ந்துள்ளனர். ஜாஸ் கோமாவில் இருந்தபோது ஹண்டர் நாய் சாப்பிடவில்லை கவலையாகவே அமர்ந்திருந்தது எனவும் கூறியுள்ளனர்.
குழந்தையான ஒட்டக்ச்சிவிங்கி தற்போது நன்றாக இருப்பதாகவும் ரினோ அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டகச்சிவிங்கியும் நாயும் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ 2.6 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
Click for more
trending news