This Article is From Jul 10, 2019

கையில் துப்பாக்கிகளுடன் மதுபோதையில் ஆட்டம் போட்ட பாஜக எம்.எல்.ஏ.!! -வைரலாகும் வீடியோ!!

கடந்த மாதம் பாஜக எம்.எல்.ஏ. பத்திரிகையாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எம்.எல்.ஏ. வைத்திருந்த துப்பாக்கிகளுக்கு லைசென்ஸ் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

New Delhi:

உத்தரகாண்டில் மது போதையில் பாஜக எம்எல்ஏ குன்வர் பிரனாவ் சிங் 3 துப்பாக்கிளுடன் இந்தி பாடலுக்கு ஆட்டம் போட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

குன்வர் சிங்கை விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தலைமை கூறியுள்ளது. வலை தளங்களில் வைரலாகும் வீடியோவில் கருப்பு பணியன், வெள்ளை ட்ரவுசர் அணிந்துள்ள எம்எல்ஏ ஒரு பெரிய துப்பாக்கி மற்றும் 2 கைத்துப்பாக்கிகளுடன் ஆட்டம் போடுகிறார். 

பாதுகாப்புக்கு உரிமம் பெற்று ஒரு துப்பாக்கி வைத்திருந்தாலும் 3 துப்பாக்கிகள் அவருக்கு எதற்கு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். 

கடந்த மாதம் பத்திரிகையாளர்களுடன் எம்எல்ஏ குன்வர் சிங் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து, அவரை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து பாஜக நடவடிக்கை எடுத்திருந்தது. 

துப்பாக்கி ஆட்டம் குறித்து பாஜக ஊடக பிரிவின் தேசிய செயலாளர் அனில் பலுனி கூறுகையில், 'நான் அந்த வீடியோவை பார்த்தேன். இதேபோன்ற புகார்கள் குன்வர் பிரனாவ் சிங் மீது முன்னரே வந்திருக்கிறது. அதனால்தான் அவர் 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். உத்தரகாண்ட் பாஜகவுடன் பேசி குன்வர் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 

போலீசார் கூறுகையில், குன்வர் பிரனாவ் சிங் வைத்திருந்த துப்பாக்கிளுக்கு உரிமம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். 

.