Read in English
This Article is From Oct 29, 2018

கடலில் தத்தளித்த கங்காருவை உயிருடன் மீட்ட ஆஸ்திரேலியா போலீஸ்!

கடற்கரை அருகே இருந்த கங்காரு கடலைப் பார்த்ததும் அருகில் சென்றது. சிறிது நேரத்தில் அலைகள் மோதியதால் தண்ணீரில் தத்தளிக்க தொடங்கியது. 

Advertisement
விசித்திரம்

விக்டோரியா போலீஸ் பதிவு செய்த காட்சிகள்.

மெல்போர்ன் கடற்கரை அருகே இருந்த கங்காரு கடலைப் பார்த்ததும் அருகில் சென்றது. கடல்நீரில் இறங்கிய கங்காரு, சிறிது நேரத்தில் அலைகள் மோதியதால் தண்ணீரில் தத்தளிக்க தொடங்கியது. 

கங்காரு கடலில் இருந்து வெளியேற முடியாமல் போராடுவதைக் கண்டு, அங்கிருந்த மக்கள் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே கடற்கறைக்கு விரைந்த போலீஸார், சி.பி.ஆர். முறை மூலம் கங்காருவை கடலில் இருந்து மீட்டனர்.

இதுகுறித்து பேசிய போலீஸார்  ‘நாங்கள் வரும் போதே கங்காரு கரையருகே வந்துவிட்டது. எதிர்பாராவிதமாக திடீரென மீண்டும் கடலுக்குள்ளே சென்றது. கடலில் நிந்தத் தெரியாமல் தவித்த கங்காரு கடல் அலைகள் மோதியதால் சில நொடிகளிலேயே கடலுக்குள் மீண்டும் சென்றது'என தெரிவித்தனர். மேலும் அவர்கள், 'இந்த  வன விலங்கு கடல் நீரைக் குடித்த பிறகும் உயிருடன் மீட்டகப்பட்டது மிகப்பெரிய ஆச்சரியம்' என போலீஸார் கூறினர்.                                                                             

 
 

'மயக்க நிலையிலிருந்த கங்காருவை மீட்க “கிஸ் ஆப் லைஃப்” (வாய் மேல் வாய் வைத்து காப்பாற்றும் முறை)-யை பயன்படுத்தவில்லை' என அங்கிருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.                                                                                   

'பொதுவாக கங்காருகளுக்கு நன்றாக நீந்ததெரியும் எனவும்; ஆனால், அரிதாக தான் அவை கடலுக்கு செல்கிறது' என  ஆஸ்திரேலியா போலீஸார் கூடுதல் தகவல் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement