This Article is From Aug 17, 2020

அணையின் நடுவே சிக்கிய நபரை 16 மணி நேரத்திற்கு பின்னர் மீட்ட விமானப்படை; திரில் வீடியோ

பலத்த மழை காரணமாக சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள குட்டகாட் அணையில் ஒருவர் சிக்கிக்கொண்டார். சுமார் 16 மணி நேரத்திற்கு பின்னர் அவர் இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகப்படர் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார்.

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் மனிதனை ஐ.ஏ.எஃப் திரில் வீடியோ

ஹைலைட்ஸ்

  • அதிகரித்து வரும் பருவமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்ககை பாதிப்பு
  • நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன
  • 16 மணி நேரத்திற்கு பின்னர் IAF அந்த நபரை மீட்டது.
Bilaspur, Chhattisgarh:

சமீப நாட்களாக வட மாநிலங்களில் அதிகரித்து வரும் பருவமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்ககை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பலத்த மழை காரணமாக சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள குட்டகாட் அணையில் சிக்கிக்கொண்ட ஒருவரை சுமார் 16 மணி நேரத்திற்கு பின்னர் இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகப்படர் மூலம் மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள குட்டகாட் அணையில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து தப்பிக்க அந்த நபர்  நேற்று மாலை நீரில் குதித்துள்ளார். ஆனால் தண்ணீரின் ஓட்டம் அதிகரித்ததன் காரணமாக அவரால் எளிதாக கரையை அடைய முடியவில்லை. இந்நிலையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு 16 மணி நேரம் கல்லில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிலாஸ்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தீபன்ஷு கப்ரா ஐ.ஏ.எஃப் உதவியை கோரியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகப்படர் மூலம் அந்த நபர் மீட்கப்பட்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக சத்தீஸ்கரில் பலத்த மழை பெய்ததால் மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகளின் அளவு உயர்ந்துள்ளது மற்றும் சபாரி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுக்மா மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி நதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான மழைப்பொழிவைக் கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்கவும், வெள்ளம் போன்ற சூழ்நிலையைச் சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவிட்டார். பிஜாப்பூர், டான்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு பஸ்தார் தொடர்ச்சியான மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடந்த 2-3 நாட்களில் இருந்து ஆறுகளில் நீர் மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பிஜாப்பூர் மாவட்டத்தில், மிங்காச்சல் மற்றும் பிற ஆறுகள் நிரம்பி வழிகின்றதால் சுமார் 100 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்திருக்கிறார்.

.